இதில் முருகையன் மனைவி செல்வி, மகள் அபிநயா, தீயை அணைக்க முயன்ற அப்பகுதியை சேர்ந்த காசிநாதன், ராஜசேகர், பழனிவேல், வேம்பையன், கலையரசி, புவனேஷ், செல்வராஜ், காளியம்மாள் உள்ளிட்ட பத்து பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்றனர்.
தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி ஜியாவுல் ஹக், எஸ்.பி.,சுந்தரவதனம் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் பார்வையிட்டனர். மாவட்ட ஆட்சியர் ரேவதி சிகிச்சையில் இருப்பவர்களை நேரில் பார்வையிட்டு நலம் விசாரித்தார். இந்த விபத்து குறித்து திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பழனிவேல், காசிநாதன், வேம்பையன் ஆகிய மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. காஸ் வெடித்த விபத்தில் ஒரே பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.