“தடை மட்டும் தீர்வாக இருக்காது!” – குழந்தைகள், சமூக ஊடகங்கள் குறித்து உளவியலாளர்

Spread the love

ஆஸ்திரேலியா, இந்தோனேஷியாவில் தடை

சமூக ஊடகப் பயன்பாடு குழந்தைகள் மத்தியில் வியக்கத்தக்க வகையில் அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் சமூக ஊடக பயன்பாடு குழந்தைகளிடம் எத்தகைய எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பது குறித்த கவலை பலரிடமும் எழத் தொடங்கியுள்ளது.

இதற்கு மத்தியில் ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளைத் தொடர்ந்து மலேசியாவிலும் 16 வயதுக்குக் குறைவான குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், முறையாக வயது சரிபார்ப்பு செய்யாத நிறுவனங்களுக்கு 2.5 மில்லியன் டாலர் வரை அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது போன்ற தடை குழந்தைகளின் மனநிலையை எவ்வாறு பாதிக்கும், இதன் நன்மைகள் என்ன, இந்தியாவிலும் இது போன்ற தடை தேவையா போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கிறார், உளவியலாளர் அமலா டெய்சி பிரகாஷ்.

“இந்தத் தடை குழந்தைகள் சமூக ஊடகங்களில் கணக்கு தொடங்குவதைத்தான் ஓரளவுக்குத் தவிர்க்குமே தவிர, பெற்றோரின் கணக்குகளை அவர்கள் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே தடை மட்டும் முழுமையான தீர்வாக இருக்காது.

சமூக ஊடகங்கள் குழந்தைகள் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள உதவுகின்றன. உடனுக்குடன் நடப்புகளைத் தெரிந்துகொள்ளவும், அறிவை வளர்த்துக்கொள்ளவும் துணை செய்கின்றன. சமூக ஊடகங்கள் மூலம் அவர்களின் திறமைகள் வெளிப்படுகின்றன. அந்தத் திறமைகளுக்கான அங்கீகாரமும் கிடைக்கிறது. தொழில்நுட்ப அறிவைப் பெறவும், அறிவைப் பகிர்ந்துகொள்ளவும், கல்வி சார்ந்த தகவல்களை அறிந்துகொள்ளவும் அவை உதவுகின்றன.

நன்மையும், தீமையும் உண்டு

ஆனால் குழந்தைகள் சமூக ஊடகங்களை அறிவு சார்ந்த நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்துவார்கள் என்று சொல்ல முடியாது. குறுகிய நேரக் காணொளிகள், தொடர்ச்சியான அறிவிப்புகள் போன்றவற்றைப் பார்க்கத் தொடங்கும்போது கவனச்சிதறல் ஏற்படலாம். கொஞ்சம் கொஞ்சமாக மொபைல் போனுக்கு அடிமையாகும் நிலை உருவாகலாம். இது அவர்களின் மூளை வளர்ச்சி, கண் ஆரோக்கியம், கற்றல் திறன் ஆகியவற்றையும் பாதிக்கக்கூடும். மறதி அதிகரிக்கலாம். சில வினாடிகளுக்கு மேல் ஒரே விஷயத்தில் கவனம் செலுத்த முடியாத நிலை உருவாகலாம். இதனால் படிப்பும் பாதிக்கப்படலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *