இதன் பின், பயணிகளின் தேவை மற்றும் ரயில் நிலையத்தின் உள்ளூர் தேவையைப் பொறுத்து இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் அல்லது குறைக்கப்படும்.
டோக்கன் பெற்றவர்களுக்கு தட்கல் டிக்கெட் புக் செய்த பிறகும் டிக்கெட்டுகள் இருந்தால், வரிசையில் முன்னுரிமை அடிப்படையில் டிக்கெட் புக் செய்யப்படும்.
இந்த டோக்கன் அடிப்படையிலான தட்கல் டிக்கெட் புக்கிங்கிலேயே இரண்டு வகைகள் உண்டு – A மற்றும் B.
A வகை குடும்ப உறுப்பினர்களுக்கு டிக்கெட் புக் செய்பவர்களுக்கு ஒதுக்கப்படும். இதில் தங்களது புகைப்பட அடையாள அட்டையும், குடும்ப உறுப்பினரின் அடையாள அட்டையும் சமர்ப்பிக்க வேண்டும்.
B வகையில் தனிநபர்கள், குடும்பம் அல்லாத குழுக்கள், பொதுப் பணிகள் ஆகியவற்றுக்கு டோக்கன் வழங்கப்படும்.
டோக்கன் பெற்ற பிறகு இந்த வகைகளை மாற்ற முடியாது.
ஆன்லைன் தட்கல் டிக்கெட் புக்கிங்கில் எந்தவித மாற்றமும் இல்லை.