பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கையோடு வாருங்கள் என ஆளுநர் அனுப்பி வைத்த நிலையில் இன்று நடைபெற இருந்த த.வெ.க தலைவர் விஜய்யின் பதவியேற்பு விழா ரத்தானது.
இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன், ” 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவை காண்பித்துவிட்டு பதவியேற்புக்கு வாருங்கள் என ஆளுநர் சொல்ல முடியாது.
.jpeg?q=75&auto=format%2Ccompress)
த.வெ.க தலைவர் விஜய்க்கு பெரும்பான்மை இருக்கிறதா? என்பதை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும். தனிப்பெரும் கட்சியாக த.வெ.கவை மக்கள் தேர்ந்தெடுத்திருக்கின்றனர்.
எனவே விஜய்யைப் பதவியேற்க அனுமதிக்க வேண்டும். ஆனால் ஆளுநர் இன்னும் முடிவு எடுக்காமல் குழப்பம் உருவாவதற்கு இடம் கொடுக்கிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.