தனியார் நிறுவனத்தை மூட நடவடிக்கை: இருமல் மருந்து விவகாரத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் | Action to Close Private Company: Minister Ma.Subramanian Inform

Spread the love

திருநெல்வேலி: இருமல் மருந்து நிறுவனத்தின் உரிமையை சட்டப்படி ரத்து செய்து, நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 60-வது ஆண்டு வைர விழா நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “மத்தியப் பிரதேச மாநிலம், சிந்து வாரா மாவட்டத்தில் குழந்தைகள் மரணத்துக்கு தொடர்புடையதாகக் கருதப்படும் ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்து குறித்து, மத்திய அரசிடமிருந்து கடந்த அக்.1-ம் தேதி எங்களுக்கு அவசர கடிதம் கிடைத்தது. கடிதம் கிடைத்ததும் அந்த மருந்தின் விற்பனைக்கு தடை விதித்தோம்.

தமிழ்நாடு அரசு மருத்துவப் பணிகள் கழகம் மூலம் அந்த மருந்து கொள்முதல் செய்யப்படவில்லை என்றாலும், தனியார் விற்பனைக்கு உடனடியாக தடை விதிக்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் உரிமையை சட்டப்படி ரத்து செய்து, நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. இருமல் மருந்தில், டை எத்திலீன் கிளைக்கால் என்ற நச்சு ரசாயனம் ஒரு சதவீதம் கூட இருக்கக் கூடாது. ஆனால், 48 சதவிகிதம் வரை கலந்திருப்பது பெரும் குற்றம். இதற்காக சம்பந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுவது சரியல்ல. இந்த ஆண்டு இதுவரை 15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு, 8 பேர் உயிரிழந்தனர். உயிரிழப்புகள் பெரும்பாலும், டெங்குவுடன் சேர்ந்து இதர இணை நோய்கள் இருப்பதாலேயே நிகழ்கின்றன. கடந்த 2012 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் ஆண்டுக்கு 65-க்கும் மேற்பட்ட இறப்புகள் நிகழ்ந்தன. ஆனால், இப்போது எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், கடந்த 5 ஆண்டுகளாக இறப்புகளும், பாதிப்புகளும் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன.

தென்காசி, மயிலாடுதுறை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பிரதமரிடமும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடமும் நேரடியாகக் கோரிக்கை வைத்துள்ளோம். பரிசீலிப்பதாகக் கூறியுள்ளனர். மத்திய அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம்.

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கு வசதியில்லை என்பது போன்ற தகவல்கள் சரியல்ல. புற்று நோய் கண்டறியும் ‘பெட்-சிடி’ கருவி உட்பட பல நவீன உபகரணங்கள் இங்கு நிறுவப்பட்டுள்ளன. எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவர்களை நியமித்து, அந்த வசதியும் மிக விரைவில் இங்கு நடைமுறைப்படுத்தப்படும். இந்த மருத்துவக் கல்லூரியில் மட்டும் தற்போது ரூ.80 கோடி மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

இருமல் மருந்து விவகாரம்: பின்னணி என்ன? – முன்னதாக, காஞ்​சிபுரம் மாவட்​டம், ஸ்ரீபெரும்​புதூர் அருகே சுங்​கு​வார்​சத்​திரத்​தில் இயங்கி வரும் தனி​யார் மருந்து உற்பத்தி ஆலையில் தயாரிக்​கப்​பட்ட இரு​மல் மருந்தை உட்​கொண்​ட​தால் வெளி​மாநிலக் குழந்​தைகள் உயி​ரிழந்​த​தாகக் குற்​றச்​சாட்​டு​கள் எழுந்த நிலை​யில், இந்த நிறு​வனத்​தின் செயல்​பாடு​கள் குறித்து விளக்​கம் கேட்டு வாயி​லில் நோட்​டீஸ் ஒட்​டப்​பட்​டது. ஆலை பூட்​டப்​பட்​டிருந்​த​தால் ஆலைக் கதவில் ஒட்​டப்​பட்​டது.

இந்த ஆலை​யில் தயாரிக்​கப்பட்ட கோல்ட்​ரிப் இரு​மல் மருந்தை உட்​கொண்ட ராஜஸ்​தான், மத்​தி​யப் பிரதேச மாநிலங்​களைச் சேர்ந்த பல குழந்தைகளுக்கு அடுத்​தடுத்து உடல் நலக் குறைவு ஏற்​பட்​டதோடு, 10-க்​கும் மேற்​பட்ட குழந்​தைகள் உயி​ரிழந்தனர். குழந்​தைகளின் உயி​ரிழப்​பு​களுக்கு இந்த இரு​மல் மருந்​து ​தான் காரணம் என்று ராஜஸ்​தான் மற்​றும் மத்​தி​யப் பிரதேச மாநிலங்​களில் புகார்​கள் எழுந்​தன. இதனைத் தொடர்ந்​து, தங்​கள் மாநிலங்​களில் ஏற்​பட்ட உயிரிழப்​பு​கள் குறித்து தீவிர நடவடிக்கை எடுக்​கக் கோரி சம்​பந்​தப்​பட்ட மாநில அரசுகள் தமிழக அரசை வலி​யுறுத்​தின.

இந்த புகாரின் அடிப்​படை​யில், கடந்த 3-ம் தேதி, ராஜஸ்​தான், மத்​திய பிரதேச மாநிலங்​களின் மருந்து கட்​டுப்​பாட்டு அதி​காரி​கள் சுங்​கு​வார்​சத்​திரத்​தில் உள்ள தனி​யார் மருந்து உற்​பத்தி ஆலைக்கு வந்து திடீர் ஆய்வு மேற்​கொண்​டனர். ஆலை வளாகம் முழு​வதும் ஆய்வு செய்​யப்​பட்ட நிலை​யில், மருந்து தயாரிப்புக்குப் பயன்​படுத்​தப்​பட்ட மூலப்​பொருள்​கள், தயாரிக்​கப்​பட்ட மருந்​தின் மாதிரி​களைப் பறி​முதல் செய்​தனர்.

இதன் தொடர்ச்சியாக, இந்த முக்​கிய விவ​காரம் குறித்து ஆலை நிர்​வாகத்​திடம் விளக்​கம் கோர, காஞ்​சிபுரம் மண்டல மருந்து கட்​டுப்​பாட்​டுத் துறை அதி​காரி மணிமேகலை நடவடிக்கை எடுத்​துள்​ளார். அவர் இந்த ஆலைக்​குச் சென்​ற​போது ஆலை பூட்​டப்​படிருந்​த​தால், இந்த நிறு​வனத்​தின் செயல்​பாடு​கள் குறித்து விளக்​கம் கோரும் நோட்​டீஸை ஆலை​யின் வாயி​லில் ஒட்​டி​னார்.

தயாரிக்​கப்​பட்ட மருந்​தில் ஏதேனும் தரக் குறை​பாடு (Sub-standard quality) இருந்​ததா அல்​லது மருந்து தயாரிப்பு விதி​முறை​கள் மீறப்​பட்​டதா என்​பது தொடர்​பாக​வும், மருந்து தயாரிப்​பின்​போது பின்​பற்​றப்​பட்ட தரக் கட்​டுப்​பாடு நடை​முறை​கள், மூலப்​பொருள்​கள் கொள்​முதல் ஆவணங்​கள், சோதனை அறிக்​கைகள் உள்​ளிட்ட அனைத்து தொடர்​புடைய ஆவணங்​களை​யும் குறிப்​பிட்ட காலக்​கெடு​வுக்​குள் சமர்ப்​பிக்க வேண்​டும் என்று அந்த நோட்​டீஸில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், இந்​தச் சம்​பவம் குறித்​துக் கேட்​கப்​பட்ட விளக்​கத்தை திருப்​தி​கர​மாக அளிக்​கத் தவறி​னால், மருந்து மற்​றும் அழகு சாதனப் பொருள் சட்​டம் மற்​றும் விதி​களின்​படி, ஆலை​யின் மீது சட்​டரீ​தி​யான கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று எச்​சரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *