தனுஷின் ‘ஓம்’ : தலைப்பு மாறியது… ட்ரெய்லரும் தள்ளிப்போனது! பின்னணியில் முன்னாள் 3 எழுத்து உச்ச நடிகரா ? – Kumudam

Spread the love

நடிகர் தனுஷின் 55-வது திரைப்படமான ‘ஓம்’ படத்தின் தலைப்பு மாற்றம் முதல் ட்ரெய்லர் வெளியீடு தாமதம் வரை அடுத்தடுத்த சம்பவங்கள் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனால் திட்டமிட்டபடி படம் வெளியாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் தலைப்பு மாற்றம்!

நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்கும் 55-வது திரைப்படமான ‘ஓம்’ படத்தை ‘அமரன்’ புகழ் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். வன்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நஸ்ரூதின் ஷா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும், சாய் அபயங்கர் இசையமைத்திருப்பதால் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. சாய்யின் இசையில் வெளியான ‘அலாக்கா லோவா’, ‘வீழா வீரா’ உள்ளிட்ட பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் அறிவிப்பு வீடியோ வெளியானபோது, படத்தின் தலைப்பு ‘OM CHAPTER: 1 UDHIRAM THE BLOOD WOOD’ என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கைக் குழு தொடர்பான பிரச்சினைகள் காரணமாக தலைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அதன்படி, தற்போது ‘O.M OPERATION MOLE’ என படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த திடீர் மாற்றம் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

ட்ரெய்லர் வெளியீட்டிலும் தாமதம்… ரசிகர்களுக்கு ஏமாற்றம்!

தலைப்பு மாற்றம் தொடர்பான செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், இன்று (நவ. 13) இரவு 7 மணிக்கு படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

இதனால் ட்ரெய்லரை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு மற்றொரு ஏமாற்றம் காத்திருந்தது. அறிவிக்கப்பட்ட நேரத்தில் ட்ரெய்லர் வெளியாகாத நிலையில், அதன் வெளியீடு சிறிது தாமதமாகும் என படக்குழு எக்ஸ் தளத்தில் அறிவித்தது.

படக்குழு வெளியிட்ட பதிவில்,

“The wait is getting longer.
The #OMTrailer is slightly D-elayed, but we will Si-ya soon.”

அதாவது,

“காத்திருப்பு இன்னும் நீள்கிறது.

#OMTrailer ட்ரெய்லர் வெளியீடு சற்று தாமதமாகிறது. ஆனால், விரைவில் உங்களைச் சந்திப்போம்.”

என்று குறிப்பிட்டிருந்தது.

இந்த பதிவைத் தொடர்ந்து ட்ரெய்லர் வெளியீடு எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

தலைப்பு மாற்றம்… ட்ரெய்லர் தாமதம்… என்ன நடக்கிறது ‘ஓம்’ படத்தில்?

முதலில் படத்தின் தலைப்பு மாற்றம், தொடர்ந்து ட்ரெய்லர் வெளியீட்டில் தாமதம் என அடுத்தடுத்த சம்பவங்கள் தனுஷின் ‘ஓம்’ திரைப்படத்தைச் சுற்றி பரபரப்பை அதிகரித்துள்ளன.

இப்படம் நவம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள தாமதங்கள் படத்தின் வெளியீட்டிலும் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையே, தனுஷ் அரசியலில் களமிறங்கப் போவதாகவும், பாஜக பின்னணியில் அவருக்கு அரசியல் திட்டங்கள் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பரவி வருகின்றன. இதனால் படத்தின் தலைப்பு மாற்றம் மற்றும் ட்ரெய்லர் தாமதத்திற்குப் பின்னால் முன்னாள் மூன்றெழுத்து உச்ச நடிகரின் அரசியல் ஆட்டமும் காரணங்களாக இருக்குமா என்ற விவாதங்களும் எழுந்துள்ளன.

ஆனால், படத்தின் தணிக்கை மற்றும் வெளியீடு தொடர்பான காரணங்களே இந்த தாமதங்களுக்குப் பின்னால் இருக்கலாம் என்றும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

‘ஓம்’ படத்திற்கு உண்மையிலேயே சிக்கலா?

தலைப்பு மாற்றம் முதல் ட்ரெய்லர் தாமதம் வரை அடுத்தடுத்த சம்பவங்கள் ரசிகர்களிடையே குழப்பத்தையும் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளன.

படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும்? திட்டமிட்டபடி நவம்பர் 20-ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகுமா? தலைப்பு மாற்றத்திற்கான உண்மையான காரணம் என்ன?

இப்படி பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில், படக்குழுவின் அடுத்த அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தலைப்புக்கு ‘ஓம்’ என்ற பெயர்… ஆனால் படத்தைச் சுற்றி எழுந்துள்ள பரபரப்போ ஓயாத புயலாக மாறியுள்ளது!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *