‘தமிழக மக்களுக்கு ‘வெற்றி தீபாவளி’ பரிசாக ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது’- எடப்பாடி | edappadi palanisamy about aavin price increase

Spread the love

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் ஆவின் பால் பொருள்களின் விலை உயர்த்தப்பட்டிருப்பது, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பலரும் இதற்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் பதிவில், “தமிழக மக்களுக்கு “வெற்றி தீபாவளி’ பரிசாக ஆவின் நெய், வெண்ணெய், இனிப்பு பலகாரங்களின் விலையை கடுமையாக உயர்த்தி அறிவித்துள்ளது தமிழக வெற்றிக் கழக அரசு.

ஆவின் பொருள்கள்

ஆவின் பொருள்கள்

மக்கள் தீபாவளிக்கு அதிகமாக நெய், இனிப்புகளை வாங்குவார்கள் என்று தெரிந்தும், இப்போது சரியான நேரம் பார்த்து விலையை உயர்த்தி லாபம் பார்க்கலாம் என்று ஒரு அரசு நினைத்து செயல்படுவது என்ன மாதிரியான மனநிலை?

வியாபாரிகள் கூட இந்த நேரத்தில் மக்களுக்கு சில சலுகைகள் அளித்து விற்பனையை அதிகரிக்கப் பார்ப்பார்கள். ஆனால், இந்த அரசோ, சினிமாவில் வரும் கார்ப்பரேட் வில்லனைப் போல செயல்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *