அவர், “தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள திரு சி. ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள்.
மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
அவரைத் தொடர்ந்து தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, “மதிப்பிற்குரிய விஜய் அவர்களுக்கு, ராகுல் காந்தி முன்னிலையில், தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்ட உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக, ஏழை எளியோருக்கான நலத்திட்டங்களையும், அனைவருக்கும் சமமான நீதியையும் வழங்கி, உங்கள் மாநிலத்தை வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உங்களுக்கு எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.