தமிழ்த்தாய் வாழ்த்து: “ஆளுநரின் செயல் கண்டனத்துக்குரியது” – அமைச்சர் நிர்மல் குமார் | Minister Nirmal Kumar has stated that the Governor’s action is condemnable.

Spread the love

ஆளுநர் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளோடு நிறுத்திக் கொள்ளாமல், இதனை உயர்கல்வி நிறுவனங்கள் வரை கொண்டு செல்வது கண்டிப்பாகத் தடுக்கப்பட வேண்டும். இது தேவையற்ற சர்ச்சைகளையே உருவாக்கும். எனவே, இது கடுமையான கண்டனத்திற்குரியது. ஆளுநர் இப்படியான செயல்பாடுகளை உடனடியாகத் தவிர்க்க வேண்டும். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட சுற்றறிக்கையில், முதலில் மாநில மொழிப் பாடலுக்கும், இரண்டாவதாக மத்திய அரசின் பாடலுக்கும், மூன்றாவதாகவே தேசிய கீதத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பாக நடத்தப்படும் அனைத்து நிகழ்வுகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்தே முதன்மையாகப் பாடப்பட்டு வருகிறது. எனவே, இந்த நடைமுறைச் சிக்கல்கள் குறித்து கலந்தாலோசித்து, சட்டப்பூர்வமாக என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அது விரைவாக எடுக்கப்படும்.” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *