"தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பாகும்" – முதல்வர் விஜய் | இசையமைப்பாளர் தேவாவிற்கு இரங்கல் | Live Blog

Spread the love

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் 

தமிழ்த் திரையுலகின் தனித்துவமான இசையமைப்பாளரும், கானா பாடல்களால் எளிய மக்களின் மனங்களைக் கவர்ந்தவருமான ‘தேனிசைத் தென்றல்’ திரு.தேவா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததோடு, பல கானா பாடல்களை எழுதி, அவரே பாடியும் உள்ளார்.

கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற திரு.தேவா அவர்களின் இசைப் பயணமும், பாடல்களும் திரையிசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பாகும்.

இசையமைப்பாளர் திரு.தேவா அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘We The Leader’ தலைவர் அண்ணாமலை

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

நடிகை குஷ்பு

“முற்றிலும் மனமுடைந்து போனேன். நம்பவே முடியவில்லை. 10 நாள்களுக்கு முன்பு தான் ஆரோக்கியமாகவும், சிரித்த முகத்தோடும் வாழ்த்திய ஒருவர், அதற்குள் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்பதை நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது.

‘தேனிசைத் தென்றல்’ என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் அவர், தேனைப் போன்ற இனிய குணமும், தென்றலைப் போன்ற மென்மையான மனமும் கொண்ட மனிதர். இசை உலகிற்கும் சினிமாத்துறைக்கும் அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது.

இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டுச் சென்றுவிட்டீர்களே… ஏன்??

உங்களை மிகவும் இழந்து தவிக்கிறோம் தேவா சார். உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்”.

தமிழ்நாடு ஆளுநர் அர்லேகர்

பிரபல இசையமைப்பாளர் தேவா அவர்களின் மறைவுக்கு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

தனது இனிமையான இசையமைப்பாலும், மறக்க முடியாத பாடல்களாலும் தமிழ்த் திரையிசை உலகில் தனித்துவமான இடத்தைப் பெற்ற தேவா அவர்களின் மறைவு, தமிழ்த் திரையுலகிற்கும் இசை உலகிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

அன்னாரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், திரையுலகினர் மற்றும் இசை ரசிகர்கள் அனைவருக்கும் ஆளுநர் அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறார். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *