தமிழ்நாடு தேர்தலை நடத்தும் முதல் பெண் தலைமை அதிகாரி! யார் இந்த அர்ச்சனா பட்நாயக்? -tamilnadu first woman chief electoral officer archana Patnaik update.

Spread the love

யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?

ஒடிசா மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், 2002-ம் ஆண்டு பிரிவில் ஐ.ஏ.எஸ். அதிகாரியானார். நீலகிரி மாவட்ட கலெக்டர், 1945- ம்‌ ஆண்டிற்குப் பிறகான கோவை மாவட்டத்தின் முதல் பெண் கலெக்டர், தமிழ்நாடு தோட்டக்கலை ஆணையர், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை செயலாளர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்து வந்துள்ளார்.

கடந்த 2024- ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

அர்ச்சனா பட்நாயக்

அர்ச்சனா பட்நாயக்

இதன்மூலம் தமிழ்நாட்டின் முதல் பெண் தேர்தல் தலைமை அதிகாரி என்கிற சிறப்புடன் தேர்தலை நடத்தி வருகிறார். தமிழ்நாடு முழுவதிலும் பதற்றமான வாக்குப்பதிவு மையங்களைக் கண்டறிந்து, சட்ட ஒழுங்கு பிரச்னைகள் எழாமல் தேர்தலை நடத்த கூடுதல் கவனம் செலுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *