"தமிழ்நாட்டில் மிக எளிதாக வெற்றி பெறுகிறார்கள்; எனக்கு பொறாமையாக இருக்கிறது" – பவன் கல்யாண்

Spread the love

“தமிழ்நாட்டில் மிக எளிதாக வெற்றி பெற்றுவிடுகிறார்கள். ஆனால் என்னால் அது முடியவில்லை” என்று ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் சிரித்துக்கொண்டே பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய முதல்வர் விஜய் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

தவிர தனது கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்திருக்கிறார்.

இந்நிலையில் முதல்வர் விஜய்யின் பெயரைக் குறிப்பிடாமல் ஜன சேனா கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய பவன் கல்யாண், “தமிழக அரசியலை நான் கவனித்து வருகிறேன். அவர்கள் மிக எளிதாக அரசியல் செய்கிறார்கள்.

கட்-அவுட் மற்றும் ஹாலோகிராம் மூலம் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்து, முதல்வர் ஆக முடிகிறது. மிக எளிதாக வெற்றி பெற்றுவிடுகிறார்கள். எனக்கு அது கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது. நான் 15 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். என்னால் அது முடியவில்லை.

பவன் கல்யாண்
பவன் கல்யாண்

அரசியல் கட்சியை நடத்த வேண்டுமென்றால் மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை அறிந்திருக்க வேண்டும். ஏதேனும் பேச வேண்டுமென்றால் அது குறித்து நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *