தருமபுரி: சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கு; குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை!

Spread the love

பின்பு காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியில் வெல்டிங் வேலை செய்யும் பிரகாஷ் என்ற இளைஞர் மீது சந்தேகம் வரவே பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில், சிறுவனை பயன்பாடற்ற நீர்த்தேக்கத் தொட்டிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததையும், அந்த சம்பவம் குறித்து சிறுவன் வெளியில் தெரிவித்து விடுவார் என்ற அச்சத்தில் கொலை செய்து சடலத்தை தொட்டியிலேயே போட்டுவிட்டு வந்ததையும் பிரகாஷ் தெரிவித்தார்.

 தூக்குத் தண்டனை!

தூக்குத் தண்டனை!

இதுதொடர்பாக காவல்துறையினர் பதிவு செய்த வழக்கு தருமபுரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

விசாரணை முடிவுற்ற நிலையில், பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக தூக்கு தண்டனையுடன் ரூ.20 ஆயிரம் அபராதமும், கொலை செய்த குற்றத்துக்காக மற்றொரு தூக்கு தண்டனையும் ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

இரு பிரிவுகளுக்கான அபராதம் கட்டத் தவறினால் தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும், மேலும், இந்த சம்பவத்தில் இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 201 மற்றும் 363 ஆகியவற்றுக்காக குற்றவாளிக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதம் கட்டத் தவறினால் கூடுதலாக ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் எனவும் தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

எனவும் தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *