தரையில் வைக்கப்பட்ட தேசியக் கொடி! பிரதமர் மோடி ரியாக்‌ஷனை பார்த்து டிரம்ப் அடித்த கமெண்ட் | PM Modi picked up Indian flag placed as spot marker on floor Trump react immediately

Spread the love

International

oi-Mani Singh S

மணிலா: மணிலாவில் இன்று குவாட் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் சந்திப்புக்கு பிறகு குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது புகைப்படம் எடுக்க வந்த மேடையில் ஸ்பாட் மார்க்கராக வைக்கப்பட்டு இருந்த இடத்தில் தேசியக்கொடி சின்னம், தரையில் கிடந்ததை பார்த்த மோடி, உடனே குனிந்து அதை எடுத்து தனது பையில் வைத்துக்கொண்டார். இதனை கவனித்த டிரம்ப், மோடி முதுகை தட்டியபடி சொன்ன வார்த்தை வைரலாகி வருகிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் ஆசியான் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு இடையே குவாட் தலைவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஜப்பான் பிரதமர் சானே தகாய்ச்சி, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

PM Modi picked up Indian flag

திடீரென கீழே குனிந்து எடுத்த மோடி

குவாட் தலைவர்கள் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பிறகு, தலைவர்கள் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். இந்த குழு புகைப்படம் எடுக்க குவாட் தலைவர்கள் பிரத்யேக இடத்திற்கு வருகை தந்தனர். அப்போது, டேபிளில் வைக்கப்படும் சிறிய தேசியக்கொடி சின்னம் தரையில் கிடந்தது. இதைக் கவனித்த பிரதமர் மோடி, சற்றும் யோசிக்காமல் உடனடியாக கீழே குனிந்து எடுத்தார்.

இதைக் கவனித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மோடியின் முதுகில் தட்டியபடி பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள் என்றார். கீழே கிடந்த தேசியக் கொடி பேட்ஜை, தனது பாக்கெட்டில் பிரதமர் மோடி வைத்துக்கொண்டார். இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

மோடியை பார்த்து டிரம்ப் சொன்ன வார்த்தை

முன்னதாக குழு புகைப்படத்திற்கு முன்பாக பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியை மிகவும் கடுமையானவர் என்று பாராட்டி பேசினார். டிரம்ப் கூறுகையில், “இந்த நாடுகளுடனும் அதன் தலைவர்களுடனும் நாங்கள் சிறப்பான உறவை கொண்டுள்ளோம். துவக்கம் முதலே நல்ல உறவு இருந்து வருகிறது.

இந்த மூன்று தலைவர்களுடன் நான் நீண்டகாலமாக பழகி வருகிறேன். அவர்கள் சிறந்த மனிதர்கள் மட்டுமின்றி நண்பர்களாகவும் இருப்பதால் எங்களுக்கு சாதகமாக உள்ளது. அதேநேரத்தில் பிரதமர் மோடி மிகவும் கடினமான நபர் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்” என்று கூறினார். குவாட் கூட்டமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

பிரதமர் மோடி பேசியது என்ன?

குவாட் கூட்டமைப்பில் பிரதமர் மோடி பேசும் போது கூறியதாவது:- உங்கள் அனைவரையும் சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. மணிலாவுக்கும் குவாட் அமைப்பும் நீண்ட காலமாக பிணைப்பு உள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு குவாட் கூட்டமைப்பின் நாடுகளின் அதிகாரிகள் முதல் முறையாக சந்தித்து பேசினர். 10 ஆண்டுகள் கழித்து 2017 ஆம் ஆண்டு, இதே நகரில் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கினோம்.

இன்று குவாட் மீட்டிங் மீண்டும் வரலாற்று சிறப்புமிக்க இந்த நகரில் நடைபெறுகிறது. இது ஒரு முக்கிய மைல் கல் ஆகும். கடந்த ஜனவரி முதல் இன்றைய தேதி வரை நமது நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் 5 முறை சந்தித்து பேசினர். இது, எங்களது அரசியல் விருப்பத்திற்கும், எங்களது கூட்டாண்மை குறித்த அர்ப்பணிப்பிற்கும் அத்தாட்சியாக உள்ளது. குவாட் வணிகத் தலைவர்கள் மன்றத்தின் முதல் கூட்டம் வரும் 2027-ல் மும்பையில் நடத்தப்படும். இன்று நடைபெற்ற சந்திப்பு, நமது ஒத்துழைப்பின் அடுத்த கட்டத்துக்கான உறுதியான இலக்குகளை நிர்ணயிக்க உதவும் என நம்புகிறேன்” என்று கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *