தர்மேந்திர பிரதான் இல்லை; ஜே.பி.நட்டா ஏன் பேச்சுவார்த்தை நடத்தினார்?|Why Did JP Nadda, Not Pradhan, Meet NEET Protesters?

Spread the love

சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய மருத்துவ ஆணையம்தான் (NMC) நீட் தேர்வுக்கான பாடத்திட்டம், குறைந்தபட்ச தகுதி அளவுகோல்கள் மற்றும் கட்-ஆஃப் மதிப்பெண்கள் தொடர்பான விதிகளைத் தீர்மானிக்கிறது.

அதுமட்டுமின்றி, எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு, அகில இந்தியக் கோட்டா கலந்தாய்வு மற்றும் மாநில அளவிலான ஒருங்கிணைப்பு ஆகியவற்றிற்கும் சுகாதார அமைச்சகமே பொறுப்பாகும்.

இந்தக் காரணங்களால் தான், பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஜே.பி.நட்டாவை டிக் செய்திருக்கிறது.

cjp அமைப்பினருடன் ஜே.பி.நட்டா

cjp அமைப்பினருடன் ஜே.பி.நட்டா

ஜே.பி.நட்டாவின் வீட்டில் தான் போராட்டக்காரர்களுடனான சந்திப்பு நடந்துள்ளது. இந்தச் சந்திப்பு ஒருமுறை அல்ல… இருமுறை நடந்துள்ளது.

முதல் முறை பிரதிநிதிகள் எழுத்துபூர்வ கோரிக்கை கடிதம் இல்லாமல் வந்திருக்கின்றனர். அதனால், எழுத்துப்பூர்வ கடிதத்துடன் இரண்டாவது முறை நட்டாவை சந்தித்தனர்.

அந்தக் கோரிக்கை கடிதத்தில் இடம்பெற்றுள்ளவை குறித்து எந்த உறுதியும் அளிக்காத நட்டா, போராட்டத்தை கைவிடுமாறு மட்டும் பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டார்.

இந்த அனைத்து பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் போது, நட்டா அமித் ஷாவிடம் சூழலை அப்டேட் செய்துகொண்டே தான் இருந்திருக்கிறார்.

அந்த நேரத்தில் அமித் ஷாவின் நாடாளுமன்ற அலுவலகத்தில் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *