தற்செயலாக பயணியாக வந்த 2 விமானிகள்.. பிளைதுபாய் விமானத்தில் 10.51 மணிக்கு என்ன நடந்தது? | Two pilots traveling as passengers: What happened on the Flydubai flight at 10:51?

Spread the love

International

oi-Velmurugan P

துபாய் : சுமார் 34 ஆயிரம் அடி உயரத்தில் “சாவுக்கும் உயிருக்கும் இடையிலான போராட்டம்” நடந்துள்ளது. தலைகீழாக காற்றை கிழித்துக்கொண்ட தரையை நோக்கி சென்ற விமானம்.. பின்னரே மேலே வருவதும், மறுபடியும் கீழே வருவதுமாக ஊசலாடியபடி இருந்துள்ளது. விமானிகளின் அறை அருகே கழிவறைக்கு சென்ற பெண் பார்த்த பின்னரே என்ன நடந்தது என்பது பலருக்கும் தெரிந்துள்ளது. இந்திய விமான மச்சார், உயிருக்கு போராடியபடி விமானத்தை காப்பாற்ற துடித்துள்ளார். அங்கு தற்செயலாக மாற்றுவிமானிகள் இருந்துள்ளனர். பிளைதுபாய் விமானத்தில் 10.51 மணிக்கு என்ன நடந்தது பற்றி விரிவாக பார்ப்போம்.

வழக்கமான உற்சாகத்துடன், துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு பறந்த விமானத்துடன் சென்ற பயணிகள் விமானத்தில் 174 பேர் இருந்தனர். சுமார் 34 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்துக்குள் திடீரென நடந்த சம்பவம், சினிமா படத்தில் கூட வராத காட்சிகளை கொண்டது. உயிரை காப்பாற்ற ஒவ்வொருவரும் நடத்திய போராட்டத்திற்கு இந்திய விமானி மச்சார் எப்படி விதை போட்டார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

Two pilots traveling as passengers What happened on the Flydubai flight at 10 51

காலை 10.51 மணி

இந்திய நேரப்படி காலை சுமார் 10.51 மணி அளவில் துபாயில் இருந்து பிளை துபாய் விமானம் புறப்பட்டு 2 மணி நேரத்துக்கும் மேலாகி இருந்தது. அந்த விமானம் வழக்கமாக சவுதி அரேபிய வான்பகுதி வழியாகவே பறக்கும். அந்த விமானம் சுமார் 34 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தது. திடீரென விமானம் கீழ்நோக்கி மின்னல் வேகத்தில் பாயத் தொடங்கியது. முதலில் பயணிகள், கடுமையான காற்றுக் குறுக்காலாக இருக்கலாம் என்றே நினைத்துள்ளார்கள். ஏனெனில் சில நேரங்களில் விமானம் தாழ்வாக வந்து மீண்டும் உயரப்பறப்பது உண்டு. ஆனால், விமானம் சில வினாடிகள் கீழே சென்ற பின்னர் மீண்டும் ஓரளவு உயர தொடங்கியது. இப்படியே விமானம் தொடர்ந்து நிலையற்ற முறையில் பறந்து கொண்டே இருந்தது.

கழிவறைக்கு சென்ற பெண்

அப்போது விமானத்தில் பயணித்த இஸ்ரேல் பயணி டஸ்விகா மனேஷ் என்பவரது மனைவி, தங்களது மகளை விமானத்தின் முன்பகுதியில் உள்ள கழிவறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது விமானி அறையில் இருந்து சத்தம் கேட்டிருக்கிறது. அவர் உடனடியாக “விமானி அறைக்குள் ஏதோ பிரச்சினை நடக்கிறது” என்று விமானப் பணியாளரிடம் கூறியிருக்கிறார். அதற்குள் நிலைமை ம் மோசமடைந்தது.

விமானி இருந்த கோலம்

அப்போது டஸ்விகா மனேஷ் கண்ட காட்சி அவரை ஆடிப்போக வைத்துள்ளது. விமானி அறையின் கதவு பகுதியில் இருந்து கேப்டன் ஸ்மித் மச்சார் அருகில் விழுந்துள்ளார். அவர் கடுமையாக காயமடைந்திருந்தார். அவரது உடலில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அவர் சுயநினைவை இழந்து விட்டார். காயத்துடன் இருந்த கேப்டன் கதவை திறந்த காரணத்தால் தான், டஸ்விகா மனேஷ்கால் விமானிகள் அறையில் நடப்பதை பார்க்க முடிந்தது. அவரை துணை விமானி தாக்கியிருக்கிறார்.

இதையடுத்து விமானி அறைக்குள் ஓடிச் சென்ற யானிவ் ஹயூன் (பிளம்பர்), விமானி அறைக்குள் நுழைந்துள்ளார். அங்கு இந்திய விமானி தரையில் கிடப்பதையும், மற்றொரு விமானி கட்டுப்பாட்டு கருவிகளுக்கு அருகே நிற்பதையும் பார்த்தார். அந்த நேரத்தில் விமானம் தொடர்ந்து கீழே மின்னல் வேகத்தில் பாய்ந்து கொண்டிருந்தது.

துணை விமானியை பிடித்தது எப்படி

யானிவ் ஹயூன், உடனடியாக துணை விமானியை மடக்கி பிடித்துள்ளார். அவரது கழுத்தைப் பிடித்து பின்னால் இழுத்து விமானி அறையில் இருந்து வெளியே கொண்டு வந்து போட்டுள்ளார். இதற்கிடையே மேலும் சில பயணிகள் விமானி அறைக்குள் நுழைந்தார்கள். துணை விமானியுடன் பயணிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது விமானம் கீழே மிகவேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது பிளம்பரான யானிவ் ஹயூன் விமானத்தின் கட்டுப்பாட்டு கருவிகளை பார்த்தார். விமானத்தை மேலே கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் விமானம் தொடர்ந்து கீழே சென்று விபத்துக்குள்ளாகும். எனவே அவர் விமானத்தின் கட்டுப்பாட்டு கருவிகளை பிடித்து இழுத்து விமானத்தின் முன்பகுதியை மேலே கொண்டு வர முயற்சி செய்தார்.

விமானம் தலைகீழாக சென்றது

சினிமாவில் பார்த்த அனுபவத்தின் அடிப்படையில் இந்த முயற்சியை செய்தார். அந்த சில வினாடிகளில் விமானம் மீண்டும் ஓரளவு சமநிலைக்கு வந்தது.அப்போது தான் பயணிகள் ஒரு முக்கியமான விஷயத்தை உணர்ந்தனர். விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க விமானிகள் வேண்டும். உடனே விமானிகள் யாரும் இருக்கிறார்களா? என்று பயணிகள்கேட்டார்கள். அப்போது அதிர்ஷ்டவசமாக, அந்த விமானத்தில் பிளைதுபாய் நிறுவனத்தைச் சேர்ந்த 2 மாற்று விமானிகள் பயணிகளாக இருந்தனர்.

அவர்கள் உடனடியாக விமானி அறைக்குள் சென்றனர். விமானத்தின் கட்டுப்பாட்டை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். இதுதான் மிகவும் முக்கியமான திருப்பமாக அமைந்தது. அந்த இரண்டு விமானிகளின் பெயர்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக பிளைதுபாய் நிறுவனத்தால் வெளியிடப்படவில்லை.

ஓடி வந்த டாக்டர்

ஒருபுறம் விமானி அறையில் பயணிகள் துணை விமானியுடன் போராடிக் கொண்டிருந்தபோது, மற்றொரு பயணி கேப்டன் மச்சாரை பார்த்தார். அவர் டாக்டர் ஷோட்டா முசாவெவ். அவர் பல் மருத்துவர். சீனாவில் இருந்து திரும்பிக்கொண்டிருந்த அவர், விமானி அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்தார். தலை, கைகளில் காயத்தால் ஏற்பட்ட அதிக ரத்தப்போக்கு காரணமாக மோசமான நிலையில் இருந்த விமானிக்கு முதலுதவி செய்தார். ரத்தப்போக்கை கட்டுப்படுத்தினார். ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க முயற்சி செய்தார்.

விமானத்தை கட்டுப்படுத்த முயற்சி

மறுபக்கம் யானிவ் ஹயூன், டஸ்விகா மனேஷ், அசப் ரஜவான் உள்ளிட்ட பயணிகள் துணை விமானியை அடித்து கட்டுப்படுத்தினார்கள். ஒரு கட்டத்தில் அவரை கட்டுப்படுத்துவதற்காக விமானத்தில் இருந்த கம்பியுடன் அவரை கையில் கிடைத்த வயர்களை எல்லாம் போட்டு கட்டி வைத்தனர். ஆனால் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க மிகவும் போராட வேண்டியதிருந்தது. மாற்று விமானிகள் விமானத்தை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சுமார் ஒரு மணி நேரம் வரை போராடினார்கள்.

விமானம் சவுதியில் தரையிறங்கியது

பிளைதுபாய் நிறுவனத்தின் 2 மாற்று விமானிகளும் விமானத்தின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டதுடன். விமானத்தை மீண்டும் டெல் அவிவ் நோக்கி கொண்டு செல்லாமல், சவுதி அரேபியாவின் தபுக் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க முடிவு செய்தனர். அவர்கள் விமானத்தை தபுக் நோக்கி திருப்பி, அவசரமாக தரையிறக்கினர்.

விமானத்தில் நடந்த அதிர்ஷ்டம்

அதன்பிறகே விமானத்தில் இருந்தவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். காயமடைந்த கேப்டன் ஸ்மித் மச்சார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பயணிகளும் பின்னர் மாற்று விமானம் மூலம் இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். மாற்று விமானிகள் ஒருவேளை விமானத்தில் பயணிக்காமல் போயிருந்தால், விமானத்தில் யாருமே உயிருடன் திரும்பி இருக்க முடியாது. பொதுவாக குறைவான தூரமுடைய விமானங்களில் விமானி, துணை விமானி ஆகியோர் தான் இருப்பார்கள். பிளை துபாய் விமானத்தை பொறுத்தவரை துணை விமானிதான் விமானத்தையே காலி செய்யதிட்டமிட்டார். விமானியை கொல்ல முயன்றுள்ளார். அப்போது அதிர்ஷ்டவசமாக பயணிகளாக விமானிகள் வந்ததால், விமானம் பத்திரமாக தரையிறங்கியது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *