`தலைமைச் செயலாளர் சாய்குமாருக்கு பணி நீட்டிப்பு’ – மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்!

Spread the love

வழக்கமாக ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு பணி நீட்டிப்பு வழங்கும் முடிவினை, மாநில அரசுக்கு அந்தக் குறிப்பிட்ட அதிகாரி ஓய்வு பெறும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு முன்பே எடுக்கும், ஆனால் சாய்குமார் ஐ.ஏ.எஸ் ஓய்வு பெற இன்னும் இரண்டரை மாதங்கள் உள்ள நிலையில், அதற்கான தேவை ஏன் எழுந்தது என்று கூடுதல் தலைமைச் செயலாளர் பொறுப்பில் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமைச் செயலகத்திற்குள் பேசிக் கொள்கின்றனர்.

கடந்த திமுக ஆட்சியில் டிஜிபி-யை நியமனம் செய்யாமல் காலம் தாழ்த்தி பொறுப்பு டிஜிபி நியமித்ததற்கு… `சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கும் பெண்கள் குழந்தைகள் மீதான குற்றங்களுக்கும் அதுவே காரணம்” என திமுக-வை விமர்சித்த இன்றைய முதல்வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான ஜோசப் விஜய், தற்போது கூடுதல் தலைமைச் செயலாளர் பொறுப்பில் பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தகுதியுடன் இருந்தும் ஏன் சாய்குமார் ஐ.ஏ.எஸ்ஸுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் எனக் கேள்வி எழுந்துள்ளது.

தலைமைச் செயலாளர் சாய்குமார் ஐ.ஏ.எஸ்., மதுரை மாவட்டம், தர்மபுரி மாவட்டம், விருதுநகர் மாவட்டம் ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியவர். தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவர், நகராட்சி நிர்வாக ஆணையர், தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், பொதுப்பணித்துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்துள்ளார். அதிமுக ஆட்சிக் காலத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அவரின் முதன்மைச் செயலாளர் – 1 ஆகவும் பணியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *