6. 100 கிராம் கற்றாழை ஜெல்லுடன் (Aloe vera gel), 10 சொட்டுகள் ரோஸ்மேரி எண்ணெய், 10 சொட்டுகள் டீ ட்ரீ (Tea tree) எண்ணெய், 10 சொட்டுகள் லாவண்டர் எண்ணெய் மற்றும் 10 சொட்டுகள் பாதாம் எண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளவும். எசென்ஷியல் ஆயில் எனப்படும் இவ்வகை எண்ணெய்களை நேரடியாகத் தலையில் தடவக்கூடாது, கற்றாழை போன்ற ஒன்றுடன் கலந்தே பயன்படுத்த வேண்டும். இந்தக் கலவையை தினமும் தலையில் தடவலாம்.
7. தலையில் வேகமாக மசாஜ் செய்ய வேண்டாம், ஏனெனில் அது முடியின் வேர்களை பலவீனமாக்கி அதிக அளவில் முடியை உதிரச் செய்யும்.

8. ஒரு ஆப்பிள், ஒரு கேரட், கால் பங்கு பீட்ரூட், 4 பேரீச்சம்பழம், சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு நெல்லிக்காய் மற்றும் சிறிய துண்டு இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்துச் சாறு எடுத்து தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை குடிக்கவும். இது முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
9. 200 மில்லி தேனில் பூசணி விதைகள், வெள்ளரி விதைகள், சூரியகாந்தி விதைகள், வால்நட்ஸ், பாதாம், முந்திரி மற்றும் பிஸ்தா ஆகியவற்றைச் சேர்த்து ஒரு வாரம் நிழலில் ஊற வைத்துச் சாப்பிடலாம்.
10. இவை அனைத்தையும் செய்த பிறகும் முடி உதிர்தல் நிற்கவில்லை என்றால், நீங்கள் கூந்தல் பிரச்னைகளுக்குச் சிகிச்சை அளக்கும் மருத்துவரை (Trichologist) அணுக வேண்டும். சில நேரங்களில் இரும்புச்சத்து குறைபாடு, தைராய்டு பிரச்னை, சமீபத்திய உடல்நல பாதிப்பு, ஹார்மோன் மாற்றங்கள், பொடுகு அல்லது பரம்பரைத் தன்மை காரணமாகவும் முடி கொட்டலாம். முறையான பரிசோதனை மற்றும் சரியான சிகிச்சை மட்டுமே இதற்கு நிரந்தரத் தீர்வைத் தரும்.
டாக்டர் தலத் சலீம்:
சென்னை, கீழ்ப்பாக்கம் கார்டனில் செஹட் த ஸ்கின் அண்ட் ஹேர் கிளினிக்கின் உரிமையாளர். சருமம், கூந்தல் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஒன்றிணைந்த சிகிச்சைகள் மூலம் தீர்வுகள் அளிப்பவர். 26 ஆண்டுக்கால அனுபவம் உள்ளவர்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.