தலைவர்கள் பலரும் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷிற்கு எதிராகக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். | “The TVK MLA from Kallakurichi must be arrested immediately” – Congress MP Manickam Tagore

Spread the love

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதாகக் கூறப்படுகிற விவகாரம், தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

மெசேஜ் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எந்தப் புகாரும் அளிக்கவில்லை என, தமிழ்நாடு காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று கூறப்பட்டிருந்த நிலையில் தனக்கு அநாகரிகமாக தவெக எம்எல்ஏ மெசேஜ் அனுப்பியதாக மாவட்ட ஆட்சியர், டி.எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்

அரசியல் தலைவர்கள் பலரும் இந்தச் சம்பவத்திற்கு எதிராகக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர், “கள்ளக்குறிச்சியில் சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பில் இருப்பவரே இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டிருக்கிறார் என்பது தவறு.

பெண்கள் தவறு நடக்கும்போது பயப்படாமல் புகார் அளிப்பது என்பது மிக மிக முக்கியம். பெண்களுடைய பாதுகாப்பு என்பது முக்கியமானது. குறிப்பாக வேலை செய்யும் இடங்களில் அவர்களுக்கு உரிய பாதுகாப்பும், மரியாதையும் அவசியமானது. இந்தச் சூழ்நிலையில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விக்னேஷ் மீது குற்றம்சாட்டப்பட்டு புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. உடனடியாகக் கைது செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *