தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர்: தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுமா? | Live News Updates

Spread the love

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுமா?

முதலமைச்சர் பதவியேற்பு விழா, அமைச்சர்கள் பதவியேற்பு விழா என இதுவரையிலான நிகழ்வுகளில் ‘வந்தே மாதரம்’ தான் முதலில் பாடப்பட்டது.

தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் கடைசியிலும் பாடப்படுவதே வழக்கம்.

ஆனால், தேசிய பாடலான வந்தே மாதரம் பாடப்பட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதற்கு ‘ஆளுநர் மாளிகையால் நடத்தப்பட்ட நிகழ்வு’, ‘தேசிய பாடல் முதலில் பாட வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறை வந்துள்ளது’ என்று எத்தனை காரணங்கள் கூறப்பட்டாலும், அது ஒத்துக்கொள்ளப்படவில்லை.

இதனால், இன்றைய சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மிக முக்கியமாக கவனிக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றம்
தமிழ்நாடு சட்டமன்றம்

எதிர்க்கட்சிகள் என்ன செய்யப் போகின்றன?

தவெக அரசு அமைந்ததில் இருந்து மின்வெட்டு, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், கொலைகள், எம்.எல்.ஏக்கள் ராஜினாமா, குதிரைப் பேரம் குற்றச்சாட்டு போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து கொண்டிருக்கின்றன.

இவை குறித்து கேள்வி எழுப்புவதே எதிர்க்கட்சிகளின் இன்றைய அஜென்டா.

உதயநிதி
உதயநிதி

அர்லேகருக்கு அழைப்பு

இன்று முதல் நாள் சட்டமன்றக் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநர் அர்லேகர் உரையுடன்தான் சபை தொடங்கும். இதனால், சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், அர்லேகருக்கு முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார்.

ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்
ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

முதல் சட்டமன்றம்

இன்று தமிழ்நாடு சட்டமன்றம் கூடுகிறது. தவெக அரசு அமைந்த உடன் கூடும் முதல் சட்டமன்றத் கூட்டத்தொடர் இது.

கூடவே, இந்த அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளும் இடம்பெற்றிருப்பது முக்கியமானது.

முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய்

இன்றைய தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகள் மற்றும் பிற அரசியல் நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ள இந்த Live Blog-ல் இணைந்திருங்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *