திமுக ஆட்சியில் கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அடுத்து தேசிய கீதம் ஒலிக்கப்படவில்லை என்று தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டத்தொடரைப் புறக்கணித்து வெளியே சென்ற நிகழ்வுகள் நாம் அடிக்கடி பார்த்த ஒன்று என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் விஜய் டெல்லி சென்றிருந்தபோதும், தேசிய பாடல் குறித்து இந்தியப் பிரதமர் மோடியிடம் கேட்டிருந்தார்.
தேசிய பாடலை முதலில் பாடுவது ‘நெறிமுறைதானே தவிர, சட்டமில்லை’ என்று கேரள முதலமைச்சர் சதீஷன் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இப்படி வெளிப்படையாக எதுவும் பேசவில்லை.

இந்த நேரத்தில்தான், இன்று சட்டமன்றக் கூட்டத்தொடர்.
ஆளுநர் அர்லேகர் சட்டமன்றத்திற்குள் வந்ததும், தமிழ்த்தாய் வாழ்த்து உடனேயே இன்றைய கூட்டத்தொடர் தொடங்கியது. தொடர்ந்து அடுத்ததாக, தேசிய கீதம் பாடப்பட்டது.