”தவெக ஆட்சி நீடிக்காது என தன் ஆசையை ஸ்டாலின் வெளிப்படுத்தி வருகிறார்”- பெ.சண்முகம்! – p.shanmugam press meet in thanajvur

Spread the love

வழக்கமாகத் தீபம் ஏற்றக்கூடிய இடத்திலேயே இந்த ஆண்டும் வரும் 24-ஆம் தேதி தீபத் திருவிழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகளைத் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் புதிய இடத்தில் தீபத்தை ஏற்றுவதன் மூலம் புதிய வழக்கத்தை ஏற்படுத்தக் கூடாது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தவெக அரசு தனது ஆறு மாத ஆட்சிக்காலத்தைப் பூர்த்தி செய்துள்ளது. இதில் வரவேற்கத்தக்க விஷயங்களையும், எதிர்க்கத்தக்க விஷயங்களையும் கலந்தே செய்துள்ளது. தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளனர்.

பெ.சண்முகம்

பெ.சண்முகம்

குறிப்பாக, விவசாயிகளின் கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு ஏறத்தாழ ரூ.9,000 கோடி விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்துள்ளனர். அதனை வரவேற்கிறோம். விவசாயிகள் பயனடையும் வகையில் பால் கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளார்கள். ஆனால், இன்றைக்கு டெல்டாவில் பாசனத்திற்குப் போதுமான அளவு தண்ணீர் வராததால் நடவு செய்த பயிர்கள் அனைத்தும் காய்ந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டு அறுவடைக்கு வருமா என்பது சந்தேகமாக உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசை வலியுறுத்தி, காவிரி மேலாண்மை வாரியத்தை வற்புறுத்தி இருக்கக்கூடிய பயிர்களைக் காப்பாற்றும் வகையில் கர்நாடகத்திலிருந்து போதுமான தண்ணீரைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *