தவெக: “ என் வெற்றி வாய்ப்பைக் கெடுப்பதற்காக சித்தரிக்கப்பட்டவை” – வைரல் வீடியோ குறித்து சத்யபாமா| TVK Sathyabhama has issued a clarification regarding the video that surfaced concerning her.

Spread the love

தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேநேரம் தவெக வேட்பாளர் பி. சத்யபாமா தொடர்பாக இணையதளத்தில் வெளியான வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் (நேற்று) இரவில் வெளியான அந்த வீடியோவில், தேர்தல் செலவுகள் மற்றும் கட்சி மாற்றம் குறித்து சத்யபாமா பேசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

அந்த வீடியோவில், “கடந்த தேர்தலில் 31 கோடி ரூபாய் செலவு செய்தேன். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. வேற வழியில்லாமல் த.வெ.கவில் சேர்ந்துள்ளேன். இங்கு சாப்பாட்டுக்காக மட்டுமே 15 லட்ச ரூபாய் செலவு செய்துள்ளேன்” என்று அவர் பேசுவது போல அதில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ அரசியல் வட்டாரத்தில் பெரும் பேச்சுப்பொருளாக மாறியது.

இந்த நிலையில், இன்று காலை பொள்ளாச்சி அருகிலுள்ள கொண்டமநாயக்கன்பாளையம் பகுதி வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவுசெய்துவிட்டு வெளியே வந்த சத்யபாமாவிடம் செய்தியாளர்கள் இதுகுறித்துக் கேள்விகளை எழுப்பினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *