தவெக கூட்டணியை உறுதி செய்த திருமா; பாமகவிற்கு வைத்த செக்.!- பின்னணி அரசியல் கணக்குகள் என்ன?| Thiruma confirms alliance with TVK what are the political calculations behind it

Spread the love

பாமக எம்.எல்.ஏ-க்களின் வாதங்களை முதல்வர் ரசிக்கிறார்!

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அவர், “அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை, ஒரு முடிவை எடுப்பது என்பது ஒரு நிலை என்றால், அந்த முடிவை நோக்கி நகர்த்தப்படுவது என்பது மற்றொரு நிலை. திருமாவளவன் இந்த முடிவை நோக்கி நகர்த்தப்பட்டிருக்கிறார் என்பதே எனது பார்வை.

இதற்குச் சில முக்கியக் காரணங்கள் உள்ளன. சுதந்திர தினத்தன்று, காங்கிரஸின் முன்னாள் மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது. கிருஷ்ணசாமியின் ஒரு மகன் காங்கிரஸில் எம்.பி-யாக இருக்கிறார்; மகள் தான் சௌமியா அன்புமணி.

சட்டமன்றத்தில் சௌமியா அன்புமணி தவெக-விற்கு எதிராகவும் பேசுகிறார். அதே சமயம் ஆதரவாகப் பேசினாலும் மிக நுட்பமாகவும், கூர்மையாகவும் பேசுகிறார். பாமக சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் மற்றும் வாதங்களை முதலமைச்சர் ரசிக்கும் சூழலும் உள்ளது.

பத்திரிக்கையாளர் சுவாமிநாதன்

பத்திரிக்கையாளர் சுவாமிநாதன்

தவெக-விற்குள் விசிக-வை விட பாமக வந்தாலும்.!

மற்றொரு விஷயம், தவெக கட்சிக்குள்ளேயே இருவேறு கருத்துப் பார்வைகள் உள்ளன. வட மாவட்டங்கள் உட்படப் பல இடங்களில் தவெக-வின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, அதிமுக-வைக் கரைப்பது (அழிப்பது அல்ல). சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருந்தாலும், 47 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றதற்கு வட மாவட்டங்களில் பாமக கூட்டணியே முக்கியக் காரணமாக இருந்தது. இதனால், பாமக – அதிமுக இடையிலான உறவை உடைக்காமல் வட மாவட்டங்களில் அதிமுக-வைப் பலவீனப்படுத்த முடியாது என்ற சூழல் உள்ளது.

அதே நேரத்தில், தவெக-விற்குள் விசிக-வை விட பாமக வந்தாலும் நன்றாக இருக்கும் என்று பேசக்கூடிய குரல்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அது வெளிப்படையாக இல்லை. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் தவெக வெற்றி பெறவே இல்லை. அதிமுக வெற்றி பெற்ற 47 தொகுதிகளில் 34 தொகுதிகள் வட மாவட்டங்களில் வருகின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *