சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தின் கடைசி நாளான இன்று, நந்தனம் YMCA மைதானத்தில் தவெக தலைவர் விஜய் தனது கடைசி பிரசார உரையை ஆற்றியிருந்தார்.
விஜய் பேசியதாவது, “தமிழ்நாட்டுல இதுவரைக்கும் வாங்காத அளவுக்கு ஐந்தரை லட்சம் கடனை திமுக அரசு வாங்கி வைத்திருக்கிறது. எல்லா வரியையும் ஏற்றி வைத்திருக்கிறார்கள். விக்கிரவாண்டி மாநாட்டில் நாம் கொள்கைகளாக அறிவித்த எதிலிருந்தும் ஒரு இன்ச் கூட மாறவில்லை. மதச்சார்பற்ற சமூகநீதி கொள்கையிலிருந்து மாறப் போவதில்லை. 100% இந்த விஜயை நம்பலாம். எம்மதமும் சம்மதம். நான் ஸ்டாலின் சார் மாதிரி கிடையாது. சொன்னா மாறமாட்டேன்.
ஒரு பக்கம் சிறுபான்மையினர் ஓட்டுக்காக கோடிகளை கொட்டி காங்கிரஸை உள்ள தூக்கி போட்டுட்டாங்க. இன்னொரு பக்கம் பாஜக கூட அண்டர் க்ரவுண்ட் டீலிங்.
ஒரு பக்கம் காவி வேஷம். இன்னொரு பக்கம் கதர் வேஷம்.
நான் திமுக – பாஜக அண்டர் க்ரவுண்ட் டீலிங்னு சொன்னது இப்போது இந்தியா முழுவதும் ஒலிக்குது. மம்தா பானர்ஜியே ஸ்டாலினை பாஜகவோட சேர்த்து வச்சு விமர்சிச்சிருக்காங்க.
ஆட்சியை இழந்ததுக்கு அப்புறம் இந்த திமுகக்காரங்க மோடி கால்லயும் அமித் ஷா கால்லயும் விழறாங்களா இல்லையானு பாருங்க.” என்றார்.
மேலும், “40 வயசுக்கு கீழ 2 கோடியே 30 லட்ச சொச்சம் இருக்காங்க. 50 வயசுக்கு கீழ இருக்க பெண்கள் மட்டும் 1 கோடியே 30 லட்ச சொச்சம் பேர் இருக்காங்க.
கருத்துக்கணிப்பு எடுக்குறவங்களுக்கு 60 வயசுக்க்கு மேலானவங்க மத்தியில நமக்கு இருக்குற ஆதரவு தெரியலையா?
திமுகவோட ஆட்சிக் கனவு ஊழல் கனவு எல்லாம் கதம் கதம்தான்.
பாண்டிச்சேரில நடந்த மாதிரியே இங்கேயும் பெரியளவுல வாக்குப்பதிவு நடக்கணும்.
ஸ்டாலின் சாரை வீட்டுக்கு அனுப்பியே ஆகணும்.
விஜய் வெளியவே வரமாட்டான்னு விமர்சிக்கிறாங்க. அப்டி சொல்றது யாருன்னு பார்த்தா பத்து தோல்வி அடைஞ்ச அனுபவசாலி. நீங்க சேலத்துல போயி ஒதுங்கிக்காம, வெளியே வாங்க பார்ப்போம். நாம நிறுத்துன வேட்பாளரை அவர் விலைக்கு வாங்குறாரு. எடப்பாடியில நம்ம சார்பா நிக்குற டிவி சின்னத்துக்கு முழு ஆதரவு கொடுங்க.” என்றார்,