“சாதியவாத சக்திகள் சாதிப் பெருமையைப் பரப்புவதால் ஏற்படும் விளைவுகளால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆணவப்படுகொலைகள் நடந்துவருகின்றன. பட்டியல் சாதியினர் மட்டுமல்ல, அனைத்து சாதிகளிலும் இந்த ஆணவப்படுகொலைகள் நடக்கின்றன. இதைத் தடுக்க தேசிய அளவில் ஆணவப்படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும்” என சமூக செயற்பாட்டாளர்கள், ஜனநாயக சக்திகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், அதுகுறித்து மாநில அரசும், மத்திய அரசும் கண்டுகொள்ளாமலே தவிர்த்து வருக்கின்றன.
இந்த நிலையில், ஆவணப் பகுகொலைக்கு எதிராக தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என இயக்குநர் பா.ரஞ்சித் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “தவெக தலைவர் விஜய் தலைமையிலான தமிழக அரசே இனியும் காலம் தாழ்த்தாமல் ஆணவப்படுகொலைக்கு எதிரான தனிச் சட்டத்தை உடனடியாக இயற்றிடு! தென்மாவட்டங்களில் குறிப்பாக, நெல்லை,தூத்துக்குடியில் சமீபகாலமாகத் தொடர்ந்து நிகழக்கூடிய சாதி ஆணவப்படுகொலைகள் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. இந்நிலை தொடர்ந்து நீடிப்பது ஆரோக்கியமான சமூகத்திற்கு அரண் சேர்க்காது.இந்நிலையில் கடந்த இருதினங்களில் அதாவது, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் நடந்தேறிய சாதி ஆணவக்கொலையை நீலம் பண்பாட்டு மையம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது! கங்கைகொண்டான் சிப்காட் தனியார் சோலார் நிறுவனத்தில் பணிசெய்துவந்த மறவர் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் (ராமலட்சுமி) திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியைச் சேர்ந்த தலித் இளைஞர் ஒருவரைக் காதலித்தார் என்பதற்காகவே தன் சகோதரரால் அப்பெண் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.