தவெக நிர்வாகி பூபாலன் கைது: “Breaking Bad Party” என விமர்சித்த ஸ்டாலின்|‘Breaking Bad Party’: Stalin Mocks TVK After ₹135 Crore Drug Seizure

Spread the love

நாகையைச் சேர்ந்த தவெக நிர்வாகி பூபாலன். இவரது வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கைக்குக் கடத்துவதற்காக பூபாலன் தனது வீட்டில் இந்தப் போதைப்பொருளைப் பதுக்கி வைத்திருந்ததாகத் தெரிகிறது.

இவரை நேற்று (அக்டோபர் 16) மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

இவரை நேற்று கட்சியிலிருந்து தவெக நிர்வாகம் நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பூபாலன் வீட்டில் மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின், “TVK = Bad Party மட்டுமல்ல, Breaking Bad Party

விஜய் - பூபாலன்

விஜய் – பூபாலன்

ஒன்றிய அரசின் DRI அதிகாரிகளால் நாகை மாவட்ட த.வெ.க. நிர்வாகியும் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளருமான பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதை ‘ஒழிப்பு’ பற்றி முதலமைச்சர் மேடைதோறும் பாடமெடுத்து வருவதை, போதை ‘ஒளிப்பு’ எனத் தவறாகப் புரிந்துகொண்டு 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை ஒளித்து வைத்திருந்ததுதான் அவர் செய்துள்ள குற்றம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரியரின் உச்சத்தில் இருந்தபோது தொக்காக மாட்டியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *