அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தவெகவில் அதிகாரபூர்வமாக இணைந்திருக்கின்றனர். தவிர பல அதிமுக முன்னாள் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தவெகவில் இணைந்திருக்கின்றனர்.
இந்த இணைப்பு விழாவில் பேசிய எம். ஆர்.விஜயபாஸ்கர், “இயக்கத்தை அமைத்த இரண்டே ஆண்டுகளில் முதல்வர் விஜய் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார். தீயசக்தி திமுகவை ஒழிக்க வேண்டும் என்று அம்மா போராடினார். அவரது மறைவிற்கு பிறகு இப்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக இருக்கக்கூடியவரை நாங்கள் எல்லோரும் தான் தேர்வு செய்தோம்.

ஆனால் அவரின் தவறான முடிவுகளால் இந்த இயக்கம் தள்ளாடி கொண்டிருக்கிறது. எங்களை துரோகி என்று சொல்கிறார். ஆனால் உண்மையில் யார் துரோகி என்று உங்களுக்கு தெரியும். திமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது சரியா?
42 ஆண்டுகள் அதிமுகவில் உறுப்பினராக இருந்து 22 ஆண்டுகள் தீவிர அரசியலில் இருந்தவன் நான். அம்மாவால் அடையாளம் காட்டப்பட்டு 5 ஆண்டுகள் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தேன். கரூர் என்று சொன்னாலே உங்களுக்கு தெரியும்.