தவெக வேளாண் பட்ஜெட்: “பழைய பட்ஜெட்டின் ரிகர்சல்” என எம்.ஆர்.கே. விமர்சனம்|”Same Old Budget”: Ex-Minister Attacks TVK Farm Budget

Spread the love

இன்று தங்களுடைய முதல் வேளாண் பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளது தவெக அரசு.

இந்தப் பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்கும் அறிவிப்புகளைச் சாடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழ்நாடு வேளாண் துறையின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

அவர் பேசியதாவது…

“‘புதிய அரசு பொறுப்பேற்றுத் தாக்கல் செய்துள்ள முதல் வேளாண் பட்ஜெட்டைத் தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் பல புதிய அறிவிப்புகள் வரும் என்ற பேரார்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆனால், சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்தப் பட்ஜெட்டைப் பார்த்தபோது, ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட பழைய புத்தகத்தையே மீண்டும் உட்கார்ந்து வாசிப்பது போன்ற உணர்வும், ஏழாவது முறையாகப் பழைய பட்ஜெட்டையே ‘ரிகர்சல்’ பார்ப்பது போன்ற உணர்வுமே ஏற்பட்டது.

‘மாற்றம்’ என்று கூறி ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் விஜய் அவர்கள், முந்தைய அரசை விட அதிக திட்டங்களைச் செய்து கொடுத்தால்தான் அது உண்மையான மாற்றமாக இருக்க முடியும்.

4,000 ரூபாய்க்குப் பதிலாக 10,000 ரூபாய் கொடுப்பதும், 50% மானியத்திற்குப் பதிலாக 100% மானியம் வழங்குவதுமே மாற்றமாகும். ஆனால், இந்தப் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் எதுவும் இடம்பெறாமல் பழைய நிலையே நீடிக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *