நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யா – இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் குழந்தையும் நலமாக இருக்கிறார்கள்.
“திரிஷா இல்லனா நயந்தாரா’, ‘மார்க் ஆண்டனி’, ‘குட் பேட் அக்லி’ உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.
கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் இவருக்கும் நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது. இயக்குநர் மணிரத்னம், சுஹாசினி, துல்கர் சல்மான், விஷால் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் ஐஸ்வர்யா தாய்மை அடைந்தார். ஆதிக்கும் பிரபு குடும்பத்தாரும் அவரை அருகிலிருந்து கவனித்துக் கொண்டனர்.