தான் படித்த பள்ளிக்கு 3 தளக் கட்டிடம் கட்டித் தந்த நடிகர் தனுஷ்! | Actor Dhanush Constructs New Building Block for His School in Saligramam

Spread the love

இந்தக் கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. தனுஷ், அவருடைய சகோதரிகள், பேட்ச் மாணவர்கள், அவருடைய கிளாஸ்மேட்டும் ஒளிப்பதிவாளருமான ஏ. குமரன் ஆகியோர் இந்தத் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.

இந்தக் கட்டிடம் குறித்தும் தனுஷ் குறித்தும் பேசிய ஒளிப்பதிவாளர் ஏ. குமரன், “தனுஷும் நானும் என் மனைவியும் இங்கேதான் 10-ஆம் வகுப்பு வரை படித்தோம். பின்னர் வேறு பள்ளியில் நானும் தனுஷும் பிளஸ் டூ படித்தோம். அவர் சினிமாவுக்குச் சென்றுவிட்டார்.

Dhanush - Thai Sathya School

Dhanush – Thai Sathya School

நான் இன்ஜினியரிங் முடித்துவிட்டு எதிர்பாராத விதமாகச் சினிமாவுக்கே வந்துவிட்டேன். ஒளிப்பதிவாளராக மாறி தனுஷுடன் ‘வேலையில்லா பட்டதாரி’, ‘தங்கமகன்’ ஆகிய படங்களில் பணியாற்றினேன்.

இந்தப் பள்ளியின் கட்டிட நிலை பற்றி அறிந்துகொண்ட தனுஷ், தானாகவே முன்வந்து இந்த மிகப்பெரிய உதவியைச் செய்துள்ளார். இன்னும் பிற கட்டிடங்களைச் சீரமைத்தும் காலியாக உள்ள இடத்தில் புதிய கட்டிடங்களைக் கூடக் கட்டிக் தருவதாக அவர் கூறியிருக்கிறார்” எனத் தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *