மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தமிழ்நாடு தலைநிமிர்ந்தது என மத்திய அரசின் நிதி ஆயோக் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாடு உட்கட்டமைப்பு, வணிக சூழல், வளம், நிதிநிலை மேலாண்மை, சுற்றுச்சூழல் என அனைத்து நிலைகளிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்துள்ளது. முதலீட்டை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு இருந்தது.
முதலீட்டுக்கு உகந்த வணிக சூழல், மின் வசதியும் இருந்ததாகக் கூறப்பட்டது.

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அஞ்சாமல் மக்கள் பணிகள் தொடரும்.
தமிழ்நாட்டில் அதிகாரத்தைப் பயன்படுத்தி குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டுள்ளார்கள் எனச் செய்திகளில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உயர்ந்ததற்கு திராவிட மடல் அரசுதான் காரணம் எனப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக இருந்த உதயநிதி விளையாட்டு துறையில் ஆற்றிய பங்கு அளப்பரியது. அவரது சீரிய முயற்சியில் விளையாட்டுத்துறை எண்ணற்ற பல சாதனைகளைப் படைத்தது.
தமிழ்நாடு அரசு ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் அறிவித்துள்ளது.
2006 முதல் 2011 வரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அழகு தமிழ் பெயர் சூட்டினால் மாநகராட்சி சார்பில் தங்க மோதிரம் பரிசாக அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆக, திராவிட மாடல் அரசின் திட்டங்களைத்தான் மற்ற அரசுகளும் பின்பற்ற வேண்டியிருக்கிறது” என்றார்.