தாராபுரம் யாருக்கு சாதகம்? காலங்காத்தாலேயே வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்த அதிமுக பானுமதி! | Dharapuram ADMK candidate Banumathi visited counting place

Spread the love

Tamilnadu

oi-Vishnupriya R

தாராபுரம்: தாராபுரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறும் நிலையில் அந்த தொகுதியின் அதிமுக வேட்பாளர் பானுமதி அதிகாலையிலேயே வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்தார்.

தாராபுரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தாராபுரத்தில் திமுக சார்பில் சுகன்யா, தவெக சார்பில் சத்தியபாமா, அதிமுக சார்பில் பானுமதி, நாதக சார்பில் கார்த்திகா, கம்யூனிஸ்ட் சார்பில் லட்சுமணன், சுயேச்சைகள் என மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

dharapuram banumathi

இந்த தேர்தலில் மொத்தம் 80.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப் பதிவுக்கு பிறகு வாக்கு பதிவு இயந்திரங்கள் எல்லாம் திருப்பூர் எல்ஆர்ஜி மகளிர் கலைக் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.

இன்றைய தினம் 14 மேஜைகளில் 23 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்த தேர்தல் முடிவுகள் என்னவாகும் என்று அனைவரது எதிர்பார்ப்பும் உள்ளது. அந்த வகையில் தாராபுரம் அதிமுக வேட்பாளர் பானுமதி அதிகாலையிலேயே வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்துள்ளார்.

தாராபுரம் அதிமுகவின் கோட்டை என சொல்லப்படுகிறது. 1977 ஆம் ஆண்டு முதலே இங்கு பெரும்பாலும் அதிமுகவே வென்றுள்ளதாம். இந்த தொகுதியில் 1977 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தான் அறிவித்த வேட்பாளர் மீது புகார்கள் வந்ததை அடுத்து அவருக்கு வாக்களிக்க வேண்டாம் என எம்ஜிஆர் பிரச்சாரம் செய்தும் அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட அந்த வேட்பாளரே வெற்றி பெற்றாராம். எனவே அதிமுகவின் கோட்டை என்ற நிலையில் இந்த முறையும் இந்த வரலாறு தக்கவைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வேட்புமனு தாக்கல் முடிந்ததும் தாராபுரத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்தது. முதல்வர் விஜய், சத்தியபாமாவை ஆதரித்து தாராபுரத்தில் தீவிர பிரச்சாரம் செய்தார். அது போல் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்திருந்தனர்.

அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சாரம் செய்தனர். அது போல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லட்சுமணன் வார்டு வாரியாக மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகாவும் தொகுதி முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 5 முனை போட்டி காரணமாக ஒவ்வொரு கட்சியும் வாக்குகளை தங்கள் பக்கம் இழுக்க தீவிர முயற்சி செய்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *