தாறுமாறாக சரிய போகுது தங்கம் விலை.. இனி ஹேப்பி தான்.. ஆனா எவ்வளவு நாள்! ஆனந்த் சீனிவாசன் சொன்ன தகவல் | Gold Price: Anand Srinivasan Explains Why the Gold Is Falling now and When It Could Rise Again

Spread the love

Business

oi-Vigneshkumar

சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே யூடர்ன் போட்டு சரிந்து வரும் நிலையில், இதற்கான காரணத்தை பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். அடுத்து வரும் மாதங்களிலும் கூட தங்கம் விலை சீராக சரியும் என குறிப்பிட்ட அவர், சீக்கிரமே அது உயர தொடங்கும் என்றும் அப்போது அது மின்னல் வேகத்தில் உயரும் எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை சர்வதேச சந்தையில் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கம் விலை குறைந்து வரும் நிலையில், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதற்கிடையே தங்கம் விலை எவ்வளவு தூரம் சரியும்.. இதற்கான காரணம்.. மேலும் எப்போது உயர ஆரம்பிக்கும் என்பது உள்ளிட்ட தகவல்களை பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.

Anand Srinivasan gold personal finance

ஆனந்த் சீனிவாசன்

இது தொடர்பாக அவர் கூறுகையில், “தங்கம் விழும்னு நானே திரும்பி திரும்பி சொன்னேன். சர்வதேச சந்தையில் அது $4000ல் இருந்து $3000 வரைக்கும் போகும். இப்போது கூட $4700 போனது ஸ்காட்டி பெசன்ட் செய்த வேலை. தங்கம் ஏறும்போது விற்கலாமா என சிலர் கேட்கிறார்கள். நான் தங்கத்தை எப்போதும் விற்கவே மாட்டேன். தங்கத்தை தேவையில்லாமல் விற்றால் நடுத்தெருவுக்கு வந்துருவீங்க. தங்கம் ஆபத்பாந்தவன். உனக்கு கஷ்டம்னு வரும்போது தங்கம் உதவுகிற மாதிரி வேற எவனும் உதவ மாட்டான்.

லாக்கரில் இருக்கும் தங்கத்தை எடுத்து கொண்டு போய் வங்கியில் வைத்தால்.. மேனேஜர் அடுத்த நொடி உனக்கு காசு கொடுப்பான். வேற எந்த சொத்தாக இருந்தாலும் இவ்வளவு சீக்கிரம் உனக்கு காசு கிடைக்காது. இதை பல தடவை நான் சொல்லி இருக்கேன். நான் மிடில் கிளாஸ் நலன்விரும்பி. மிடில் கிளாஸ் நல்லா இருக்க தங்கம் தேவை. மறுபுறம் இன்னொரு கும்பல் இருக்கு.. அந்த கும்பல் எப்படின்னா, மிடில் கிளாஸிடம் இருந்து எப்படி கமிஷன், அடிச்சு பாக்கெட்ல போடலாம்னு பாக்குற கும்பல்.

தங்கம் வைத்திருக்க வேண்டும்

தங்கம் வைத்திருந்தால் உன் குடும்பத்துக்கு நல்லது. தங்கம் விலை கடந்த 1900ல் இருந்து கடந்து வந்த பாதை என ஒரு சார்ட் இருக்கிறது. நீண்ட கால நோக்கில் அது குறைந்ததே இல்லை. ஆனால், தற்காலிகமாக தங்கம் விலை குறையும்னு சொன்னதே நான் தான். இதற்கு காரணம் அமெரிக்க பெடரல் கவர்னர் கெவின் வார்ஷ் பேசிய பேச்சு தான்!

என்ன நடந்தது

கெவின் வார்ஷ் எம்ஜிஆர் மாதிரி டைலாக் பேசினார். உயிரை விட்டாவது நான் பணவீக்கத்தை காலி பண்ணுவேன். 2%-க்கு கீழ் பணவீக்கத்தை கொண்டு வருவேன்னு டைலாக் பேசினார். 65 மாதமாக அமெரிக்காவில் பணவீக்கம் 2% இலக்கிற்குள் இல்லை. அதை குறைத்து நான் சாதனை படைப்பேன் என்றார். இதற்கு தேவையை என்றால் வட்டி விகிதத்தை கூட உயர்த்துவேன் என்றார். அவர் பேசி முடித்தவுடன் தங்கம் விலை 4% சரிந்துவிட்டது.

வரும் செப்டம்பர் மாதம் அவர் வட்டி விகிதத்தை 0.25% ஏற்றினால் தங்கம் விலை டாப் டக்கர் மாதிரி விழும். இன்னொரு கால் சதவீதம் ஏத்தினாருன்னு வை, தங்கம் ஐசியு பக்கமும் போய்விடும். நம்ம ரிசர்வ் வங்கி ஆளுநர் முறையான நடவடிக்கை எடுக்காமல் இப்படியே இருந்தால்.. ரூபாய் மதிப்பு மோசமாகிடும். அப்போது தங்கம் விலை பெரிதாக இறங்காது. கொஞ்சம் இறங்கி பிறகு மீண்டும் ஏறிவிடும். அவ்வளவுதான்.!

எப்போது உயரும்!

அதேநேரம் இரண்டு முறை வட்டி விகிதத்தை ஏற்றினால்.. அடுத்தாண்டு இறுதிக்குள் அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை வந்துவிடும். அதாவது 2027ல் ரிசஷன் வந்துவிடும். ரிசஷன் வந்த உடனே வட்டி விகிதத்தை கட் பண்ணுவாரு. அப்படி கட் செய்த உடனே தங்கம் விலை பாதாளத்தில் இருந்து ராக்கெட்டில் பறந்துவிடும். இப்போது சரியும் என்றாலும் எவ்வளவு தூரம் சரியும் என்பதை யாராலும் துல்லியமாக சொல்ல முடியாது.

வட்டி விகித்ததை நிச்சயம் உயர்த்துவேன் என அவர் சொன்னதால் இப்போது 4% வரை தங்கம் சரிந்துள்ளது. வட்டி விகிதத்தை குறைத்தால் அது மேலும் 3% விழும். இரண்டாவது முறையாக ஏற்றினால் 7-8% விழும். அதாவது வட்டி விகிதத்தை குறைத்தால் 10% வரை தங்கம் விழும். அதேநேரம் அமெரிக்காவில் ரிசஷன் வரும்போது வட்டி விகிதத்தை குறைத்தால் தங்கம் விலை ராக்கெட் மாதிரி மேல் போகும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *