திடீரென வந்த போன் கால்! ஸ்கிரிப்டை காதில் சொல்லிய ராஜ்மோகன், உடனே அழுத சத்யபாமா! கனிமொழி கிண்டல் | Kanimozhi criticises Sathyabama’s high drama

Spread the love

Tamilnadu

oi-Vishnupriya R

செங்கல்பட்டு: மதுராந்தகம் இடைத்தேர்தலையொட்டி வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து கனிமொழி பேசிய போது, அமைச்சர் ராஜ்மோகனுக்கு வந்த ஒரு போன் காலை தொடர்ந்து வேட்பாளர் சத்தியபாமா கதறி அழுத்த நடிப்பை இதுவரை தான் பார்த்ததே இல்லை என தெரிவித்துள்ளார்.

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வழக்கறிஞர் இ.பரந்தாமனை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. மதுராந்தகம் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

by election 2026 kanimozhi 2026

அப்போது உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து பரந்தாமனை வெற்றி பெறச் செய்யுமாறு அவர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.

உதயசூரியன் சின்னம்

பிரச்சாரத்தில் பேசிய அவர் , “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுத்து மக்களிடம் ஒப்படைத்துள்ள வேட்பாளர் பரந்தாமன். அவரை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

இலவச மின்சாரம்

தொடர்ந்து, மின்சாரம் மற்றும் மின் கட்டணம் தொடர்பாக ஆளும் தவெக அரசை விமர்சித்த அவர், தேர்தலுக்கு முன்பு இலவச மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டதாகவும், ஆனால் மக்கள் எதிர்பார்த்தபடி அவை நிறைவேற்றப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

100 நாள் வேலை திட்டம்

மேலும், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு, 100 நாள் வேலைத் திட்டம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். 100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கான வேலை நாட்கள் குறைக்கப்பட்டதாகக் கூறிய கனிமொழி, இதுகுறித்து முதலமைச்சர் விஜய் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளாரா என்றும் கேள்வி எழுப்பினார்.

“மக்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய வேலை மற்றும் சம்பளத்திற்காக போராடக்கூடிய தலைவராக மு.க.ஸ்டாலின் இருப்பார்” என்றும் அவர் தெரிவித்தார்.

விவசாயக் கடன் தள்ளுபடி

விவசாயிகள் தொடர்பான வாக்குறுதிகளையும் சுட்டிக் காட்டிய கனிமொழி, விவசாயக் கடன் தள்ளுபடி, கரும்புக்கு கூடுதல் கொள்முதல் விலை உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா என கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்து தவெக தரப்பினர் முன்வைத்த விமர்சனங்களை சுட்டிக்காட்டிய கனிமொழி, தற்போது அந்தக் கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில் நடைபெற்றதாகக் கூறப்படும் கொலை மற்றும் பாலியல் வன்முறை சம்பவங்களை குறிப்பிட்டு கேள்வி எழுப்பினார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு துணை நிற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், ஒரு குழந்தை பாலியல் வன்முறைக்கு ஆளானதாகக் கூறப்படும் சம்பவத்தில், அந்தக் குடும்பத்தினரிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேசி ஆறுதல் தெரிவித்ததாகவும், “தைரியமாக இருங்கள்; நாங்கள் இருக்கிறோம்” என்று கூறியதாகவும் கனிமொழி தெரிவித்தார்.

நாடகம்

தவெக அரசின் செயல்பாடுகளை விமர்சித்த கனிமொழி, “இந்த ஆட்சி நாடகம் நடத்தக் கூடிய ஆட்சி” என்று குற்றம்சாட்டினார்.

தேர்தல் பிரச்சாரங்களின்போது உணர்ச்சிகரமான நிகழ்வுகள் திட்டமிட்டு உருவாக்கப்படுவதாகக் கூறிய அவர், குறிப்பிட்ட ஒரு பிரச்சார நிகழ்வில் நடைபெற்ற சம்பவத்தையும் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்தார்.

ராஜ்மோகனுக்கு வந்த போன்

இன்று முதல்வர் விஜய் நிற்கிறார், அருகே வேட்பாளர் சத்தியபாமா இருக்கிறார், பின்னால் அமைச்சர் ராஜ்மோகன். சத்தியபாமா தனக்கு வாக்கு கேட்டு பேசிக் கொண்டிருக்கிறார், உடனே ராஜ்மோகனுக்கு ஒரு போன் வருகிறது. உடனே சத்தியபாமாவிடம் ஏதோ சொல்கிறார், உடனே சத்தியபாமா கதறி அழுகிறார். முதல்வர் விஜய் அந்த அம்மையாரை கட்டி அணைத்து ஆறுதல் சொல்கிறார். இது போன்ற ஒரு நாடகத்தை நான் இதுவரை அரசியலில் பார்த்ததே இல்லை.

புதிய சட்டசபை

மேலும், புதிய சட்டமன்றக் கட்டிடம் மற்றும் முதலமைச்சர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டமைப்புகளுக்காக செலவிடப்படும் தொகைகள் குறித்தும் கேள்வி எழுப்பிய அவர், மக்கள் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய அரசு இதுபோன்ற செலவுகளை மேற்கொள்வது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

இட்லி அரிசி

பொன்னி அரிசி, இட்லி அரிசி, சூரியகாந்தி எண்ணெய், சர்க்கரை, வெங்காயம், தக்காளி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாகக் கூறிய அவர், அதே நேரத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முதலீடுகள் போதுமான அளவில் இல்லை என்றும் விமர்சித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *