“திமுக-வை வழிநடத்த தகுதியானவர் உதயநிதியா கனிமொழியா? முடிவு செய்யட்டும்” – அமைச்சர் நிர்மல் குமார்| “Is Udhayanidhi or Kanimozhi the right person to lead the DMK? Let them decide” – Minister Nirmal Kumar.

Spread the love

திருச்சியில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “ நீட் தேர்வைச் ரத்து செய்யக் கோரியும் நாடு முழுவதும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் திரண்டு போராடி வருகிறார்கள். இதில் எந்தவித கட்சி அடையாளமும் இல்லாமல் தவெக இளைஞர்களும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

ஆனால், தி.மு.க அரசு இதிலும் தலையிட்டு, 200, 300 ரூபாய் கொடுத்து சிலரை அழைத்து வந்து, “ஜென்-ஜி தி.மு.க’ (Gen-Z DMK) என்ற டி-ஷர்ட்டை அணிய வைத்துப் போராட்டத்தைத் திசைதிருப்பவும் குழப்பத்தை ஏற்படுத்தவும் முயல்கிறது.

ஸ்டாலின் - திமுக

ஸ்டாலின் – திமுக

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு ‘ஜென்-ஜி’ என்றால் என்னவென்றே புரியவில்லை. அவருக்கு யாரோ தவறான ஆலோசகர்கள் வழிகாட்டுகிறார்கள். தேர்தல் நேரத்தில் ‘பெண் டீம்’ அமைத்து அவரைத் தவறாக வழிநடத்தியது போல, இப்போதும் அவரிடம் தவறான புரிதலை உருவாக்கியுள்ளனர்.

உதயநிதி இதுபோன்ற கோமாளித்தனமான வேலைகளை விட்டுவிட்டு, தனது தகுதியைப் பற்றி சுயபரிசோதனை செய்ய வேண்டும்.

தி.மு.க-வின் தற்போதைய தலைவர் ‘திராவிட மாடல்’ என்று கூறிச் தன் தலைமையில் ஆட்சி நடக்கிறது என்ற உணர்வே இல்லாமல் சென்றுவிட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *