திருச்சி: “உங்களுக்கு என்னதான் சார் பிரச்னை?” – அமைச்சர் ரமேஷ் | Minister Ramesh has raised questions regarding the allegations made by the opposition parties.

Spread the love

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சமூக நலத்துறை சார்பில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அமைச்சர் ரமேஷ், எம்.பி கிறிஸ்டோபர் திலக், த.வெ.க எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரமேஷ், “தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் நல்லாட்சியில் பல்வேறு முன்னோடித் திட்டங்கள் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தாராபுரம் இடைத்தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகள் தேவையற்ற கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றன.

அமைச்சர் ரமேஷ்

அமைச்சர் ரமேஷ்

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தவெக ஒரு இடத்தில் கூட ஜெயிக்காது எனப் பேசியவர்கள் மத்தியில், இன்று மக்களின் அமோக ஆதரவோடு முதலமைச்சர் விஜய் தலைமையில் நல்லாட்சி நடந்து கொண்டிருக்கிறது. தாராபுரம் தொகுதியில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் ஒவ்வொரு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்து வருகிறோம். களத்தில் பொதுமக்கள் அனைவரும் தமிழக வெற்றித் கழகத்தின் “விசில்’ சின்னத்திற்கு வாக்களிக்க மிகுந்த ஆர்வத்தோடு தயாராக இருக்கின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *