திருச்சி: பட்டப்பகலில் நகை மதிப்பீட்டாளரை கட்டிப்போட்டு ஒரு கிலோ நகை கொள்ளை! – 5 பேரை தேடும் போலீஸ்

Spread the love

மகாராஷ்டிராவைச் சேர்ந்த உதய் (வயது: 36) என்பவர் திருச்சியில் நகை மதிப்பிடும் பணியைச் செய்து வருகிறார். அவர், குடும்பத்தோடு பெரிய செட்டித் தெருவில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவரது குடும்பத்தினர் அனைவரும் கோடை விடுமுறைக்காக சொந்த ஊரான மகாராஷ்டிராவிற்குச் சென்று உள்ள நிலையில், உதய் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இவர் வசிக்கும் வீட்டின் கீழ் தளத்தில் அவர் கடையில் பணியாற்றும் இளைஞர் ஒருவர் தங்கி உள்ளார். இந்த நிலையில், மதியம் அந்த இளைஞரின் வீட்டிற்குச் சென்ற ஐந்து பேர், “உங்கள் ஓனரிடம் பேச வேண்டும்’ எனக் கூறியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, அவர்கள் ஐந்து பேரையும் இளைஞர், உதய் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது பேசிக் கொண்டிருந்த அவர்கள் ஐந்து பேரும், திடீரென உதய்யை அடித்து அவரை வீட்டு பாத்ரூமில் வைத்து அடைத்து கதவை பூட்டிவிட்டனர். மேலும், இளைஞரையும் அடித்து கட்டிப்போட்டு விட்டு உதய் வீட்டில் இருந்த நகைகளை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *