திருநெல்வேலி: சுட்டிக்காட்டிய விகடன்; புத்துயிர் பெறும் ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடம்!

Spread the love

அச்செய்தியானது உடனடியாக அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்றது. சிறிது நாள்களிலேயே உள்ளே வளர்ந்துகிடக்கும் புதர்கள், முட்செடிகள் போன்றவற்றை சுத்தம் செய்து, சமுதாய நலக்கூடத்தை குறிப்பிட்ட காலத்தில் சீரமைத்து தற்போது வண்ணம் பூசப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் கேட்டபோது,

“இச்செய்தி வெளிவந்திருந்ததை அறிந்தோம். ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடத்தை சீரமைப்பதற்கான வேலைகளையும் அதன் பிறகு உடனே துவங்கிவிட்டோம். பழுதடைந்த சமுதாய நலக்கூடத்திற்கு நிதி ஒதுக்கீட்டிற்காக காத்திருந்தோம். நிதி வந்தவுடன் வேலையைத் தொடங்கிவிட்டோம். விடுதியாக, அலுவலகமாகப் பல்வேறு வகையில் பயன்படுத்தப்பட்ட இந்தச் சமுதாய நலக்கூடத்தை மறுசீரமைப்பு செய்து வருகின்றனர். பணிகள் நிறைவடைந்த பின் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இந்த சமுதாய நலக்கூடமானது பயன்படுத்தப்படும்.” என்று கூறினார்.

சீரமைக்கப்பட்டு வரும் ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடம் இன்னும் சிறிது காலத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *