திருப்பரங்குன்றம்: “உலகம் முழுவதும் பிரபலமடைந்துவிட்டது தவெக அரசு”– தமிழிசை செளந்தரராஜன்|tamilisai on tvk government in thiruparankundram issue

Spread the love

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை எதிர்த்துத் தடுக்க முயன்றதால், இன்று தீபம் ஏற்றுவதை உலகமே பார்க்கப்போகிறது என்று தவெக அரசை விமர்சித்து பேசியிருக்கிறார் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “ஆட்சி அமைத்து ஆறு மாதத்திற்குள் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கைது, உச்ச நீதிமன்றத்தால் கடுமையான கண்டனம், சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படாத ஒரு சூழ்நிலை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது தவெக அரசு.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

நேற்றைய தினம் இந்தியா மட்டும் அல்ல உலகம் முழுவதும் பிரபலமடைந்துவிட்டது தவெக அரசு. திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை எதிர்த்துத் தடுக்க முயன்றதால், இன்று தீபம் ஏற்றுவதை உலகமே பார்க்கப்போகிறது. முருகனின் அருள் பெரியது. இதனைத் தடுக்க நினைத்த ஆட்சியின் அதிகாரம் நிச்சயம் கண்டனத்திற்குரியது.

தீபம் ஏற்றுவதற்கு சிறுபான்மையினரின் ஆதரவும் இருக்கத்தான் செய்கிறது. சு. வெங்கடேசன் போன்ற எம்பிக்கள் நீங்கள் தர்கா இருக்கிறதால் தான் அங்கு தீபம் ஏற்ற சொல்கிறீர்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் அப்படி இல்லை. மதப்பிரிவினையை உண்டாக்குவது திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தவெகத் தான். நேற்றில் இருந்து ஒரே கொண்டாட்டமாக இருக்கிறது” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *