திருப்பரங்குன்றம்: `சனாதன விரோத மனநிலையை உச்ச நீதிமன்றம் அம்பலப்படுத்தியுள்ளது’ – பாஜக

Spread the love

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த மறுத்த திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அறங்காவலர் குழுவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நாளை (நவம்பர் 28) மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவும், முருகப்பெருமானின் பக்தர்கள் தீபம் ஏற்ற அனுமதிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு பாஜக தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் தூண்

திருப்பரங்குன்றம் தூண்

அந்த வகையில் தேசிய பாஜக தலைவர் நிதின் நபின் வெளியிட்டிருக்கும் பதிவில், “நாளை திருப்பரங்குன்றம் தீபத்தூணில் மகா தீபம் ஏற்றுமாறு உத்தரவிட்டதன் மூலமும், தங்கள் அரசியல் எஜமானர்களின் கட்டளைகளுக்கு ஏற்ப செயல்பட்டதற்காகத் தமிழக அதிகாரிகளைக் கடுமையாகக் கண்டித்ததன் மூலமும், “இந்தியா’ கூட்டணி அரசின் சனாதன விரோத மனநிலையை மாண்புமிகு உச்ச நீதிமன்றம் முழுமையாக அம்பலப்படுத்தியுள்ளது.

பாரதத்தின் புனிதமான பாரம்பர்யங்களை எந்தவொரு அரசியல் சதியாலும் தடுத்து நிறுத்த முடியாது. முருகப்பெருமானின் தெய்வீக அருள் அனைத்து பக்தர்களையும் பாதுகாத்து, தைரியம் மற்றும் தர்மத்தின் பாதையில் வழிநடத்தட்டும். வெற்றி வேல்! வீர வேல்!” என்று பதிவிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *