இந்த வழக்கு விசாரணை கோவை பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விவேகானந்தன் இன்று தீர்ப்பு வழங்கினார். திவ்யா, ராஜதுரை ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்ட நிலையில், இருவருக்கும் தனித்தனியாக தண்டனை விபரங்கள் அறவிக்கப்பட்டது.
ராஜதுரைக்கு இரட்டை ஆயுள் தண்டணையும், 13 ஆண்டுகள் சிறை தண்டணையும், 1.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டன. மேலும் திவ்யாவிற்கு 10 ஆண்டு சிறை தண்டணையும், ஆயுள் தண்டணையும் விதித்தார்.
கொடூரமான கொலை வழக்கு என்பதால் தண்டனையை ஏக காலத்தில் இல்லாமல், தனித்தனியாக தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்திரவிட்டார்.
ராஜதுரை 13 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்த பின்பு ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும், திவ்யா 10 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த பின்பு ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி விவேகானந்தன் தெரிவித்தார்.