ஆனால் ஒரு அடி ஆழத்தில் புதைத்ததால் துர்நாற்றம் வீசி உடனே சிக்கி விட்டார்” என்றனர்.
கடத்தூரில் சம்பவம் நடந்த பகுதியிலுள்ளவர்களிடம் கேட்டால், “இவர்கள் யார், எந்த ஊர் என்பதே எங்களுக்குத் தெரியாது, பிழைப்பதற்காக வந்து இங்கு குடியிருக்கிறார்கள் என்று நினைத்தோம். ஆனால், இப்படி நடந்துள்ளது அதிர்ச்சியா இருக்கு” என்றனர்.
‘இந்த கொலையில் வேறு யாரும் ஈடுபட்டிருக்கிறார்களா?’ என்று கடத்தூர் இன்ஸ்பெக்டர் வேலுதேவனிடம் கேட்டோம், “இல்லை, திருமணம் கடந்த உறவில் வாழ்ந்து வந்த அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சந்தேகத்தால் கடந்த 2 ஆம் தேதி கடுமையாக தாக்கிவிட்டு சென்று, கடந்த 6 ஆம் தேதி வீட்டுக்கு வந்த வெங்கடசாலம், இறந்துவிட்ட பாப்பாத்தியை அருகிலுள்ள இடத்தில் புதைத்துவிட்டு சென்றுள்ளார். பிடித்து விசாரித்தபோது திட்டமிட்டு கொலை செய்யவில்லை என்று தெரிவித்தார். இதில் வேறு யாரும் சம்பந்தப்படவில்லை என்பது எங்கள் விசாரணையில் தெரிய வந்தது, நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறைக்கு அனுப்பிவிட்டோம்” என்றார்.
‘திட்டமிட்டு கொலை செய்யவில்லவில்லை என்று வாக்குமூலத்தில் கூறியுள்ள வெங்கடாசலம், கோபத்தில் செய்திருந்தால் பாப்பாத்தியை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றிருக்கலாம். நான்கு நாள் கழித்து யாருக்கும் தெரியாமல் புதைத்ததன் மூலம் திட்டமிட்டுத்தான் கொலை செய்திருக்கிறார் என்பது தெரிகிறது,” என்றும் தெரிவிக்கிறார்கள்.