இதையடுத்து ஜன்னல் வழியாக அறைக்குள் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டார். மள மளவென அறை முழுக்கத் தீ பரவியது. தீ உள்ளுக்குள் இருந்த இருவர் மீதும் பற்றிக்கொள்ள… தாங்க முடியாமல் அலறியுள்ளனர். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், தீயணைப்பு துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கிராம மக்களுடன் சேர்ந்து தீயை அணைத்தனர். பலத்த தீ காயமடைந்த சிதம்பரம், கண்ணம்மா ஆகிய இருவரையும் மீட்டு, சிகிசைக்காக சேர்த்தனர். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து பேராவூரணி போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டதில், அமுதா இந்த படுபயங்கர காரியத்தை செய்தது தெரிய வந்தது.