‘திரும்பயும் எம்.எல்.ஏ ஆகணும்!’ – குழப்பும் இசக்கி சுப்பையா; கடுப்பில் லோக்கல் தவெக! |“I Want to Become an MLA Again!” – Isakki Subbaiya’s Confusing Statement Leaves Local TVK Leaders Angry

Spread the love

இடைத்தேர்தலில் வெல்ல வேண்டுமெனில் இப்போதே அவர் களத்தை தயார் செய்ய தொடங்க வேண்டும். தளபதிக்காக நீண்ட காலமாக உழைத்த நிர்வாகிகளை அரவணைத்து செல்ல வேண்டும். எதையுமே செய்யாத இசக்கி சுப்பையா இப்போது வந்து ராஜினாமா செய்த எம்.எல்.ஏ போஸ்டிங்கே திரும்பக் கேட்டு குழப்புகிறார். தளபதியே இடைத்தேர்தலை மீண்டும் நடத்த வேண்டுமென மனுத் தாக்கல் செய்கையில், இவர் அதற்கு நேர்மாறாக இப்படியொரு மனுவை தாக்கல் செய்வது தலைமைக்கே எதிரான செயலாக இருக்கிறது. அவர் அதிமுகவுடன் மீண்டும் பேசத் தொடங்கி விட்டாரோ எனும் சந்தேகம்தான் எங்களுக்கு எழுகிறது. இதுதொடர்பாக தலைமைக்கும் புகாரை எடுத்து செல்வோம்’ எனப் பொருமுகின்றனர்.

இசக்கி சுப்பையா தரப்பில் பேச்சு கொடுக்கையில், ‘தவெகவில் மாவட்டச் செயலாளர் பதவிக்கோ அமைப்புச் செயலாளர் பதவிக்கோ எந்த அதிகாரமும் இருப்பதாக தெரியவில்லை. லோக்கல் நிர்வாகிகளும் அண்ணனுக்கு ஒத்துழைத்துப் போவதில்லை. அதனால் அண்ணனே கொஞ்சம் அப்செட்டாகத்தான் இருக்கிறார். இடைத்தேர்தல் சீக்கிரமாக வந்தால் வென்று அமைச்சர் பதவிக்கு மூவ் செய்யலாம் என நினைக்கிறார். அதற்காகத்தான் நீதிமன்றத்தில் மனு தாக்கலும் செய்திருக்கிறார். மற்றபடி வேறெந்த பிரச்னையும் இல்லை’ என்கின்றனர்.

அம்பாசமுத்திரம் தொகுதியை நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் குறி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், அந்தத் தொகுதியில் புகைய தொடங்கியிருக்கும் பிரச்னைகளுக்கு தலைமை முகம் கொடுக்குமா என்பதே தவெக நிர்வாகிகளின் கேள்வியாக இருக்கிறது.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *