கடந்த ஐந்து ஆண்டுகளில், கட்டுக்கடங்காத போதைப்பொருள் புழக்கம், குற்றவாளிகளிடையே சட்டம் மற்றும் காவல்துறை மீதான பயமின்மை போன்றவற்றால் தமிழகம் இருண்ட படுகுழியில் வீழ்ந்திருக்கிறது.
இந்தப் பிரச்னைகளைச் சரிசெய்து, தமிழகத்தை மீட்டெடுக்க இன்னும் சில காலம் எடுக்கும். தமிழகத்தை இவ்வளவு மோசமான நிலைக்குத் தள்ளியது இந்த திமுக ஆட்சிதான்.

இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டு, அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் முழுமையான பாதுகாப்பும், மனநல ஆலோசனைகளும் வழங்கப்பட வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.