தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா “காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்திற்குப் பிறகு தமிழில் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார். பெரும்பாலும் தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் கவனம் செலுத்தி வந்த அவர் தற்போது சோனி லிவ் ஓடிடி தளத்துடன் இணைந்து ஒரு புதிய தமிழ் ப்ராஜெக்ட் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாஸ் கம்பேக் கொடுத்துள்ளார்.
சமந்தா நடிப்பில் அண்மையில் வெளியான “மா இண்டி பங்காரம்” திரைப்படத்தின் ரிலீசுக்கு முன்பாக அவர் சினிமாவிலிருந்து முற்றிலும் விலகிவிடலாம் என்று அதிர்ச்சியான முடிவை எடுத்திருந்தார். ஆனால் அந்த திரைப்படத்தின் கதை தயாரிப்பாளரான ராஜ் நிடிமோரு தான் அவரை சமதானப்படுத்தி அந்தப் படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார். தியேட்டருக்கு ரசிகர்கள் வருவார்களா என்ற பயம் சமந்தாவுக்கு இருந்த நிலையில், படம் வெளியாகி தியேட்டர்களில் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்துள்ளது.
இந்நிலையில் தமிழ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் நடிகை சமந்தா தயாரித்து முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படமான “மா இன்டி பங்காரம்” தெலுங்கில் உருவான படம். இப்படம் தற்போது தமிழில் டப் செய்து “எங்கள் தங்கம்” என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு சமந்தா ஆக்ஷன் கதைக்களத்தில் இறங்கியிருப்பது ரசிகர்களிடம் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. மேலும் பிவி நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் கவுதமி, மஞ்சுஷா, திகந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் வெளியாகி 22 நாட்களிலேயே ரூ 100 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் முதல் நாளிலேயே சுமார் ரூ 13 கோடி வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இப்படம் விரைவில் ரூ 200 கோடி வசூலை ஈட்டி விடும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. தெலுங்கு சினிமா வரலாற்றில் பெண் நாயகி படங்களில் அதிகம் வசூலித்து முதலிடத்தைப் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் , ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படம் வருகின்ற 17-ந்தேதி ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது. ஜியோ ஹாட் ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் கண்டு களிக்கலாம்.

