ஆனால் இந்தி படங்கள் தெற்கில் வெற்றி பெற்றால் அப்படி அழைப்பதில்லை. எனவே இந்த வார்த்தை எனக்கு உடன்பாடில்லை. என் படத்தை தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மக்களிடம் கொண்டு சேர்க்க விரும்புவேனே தவிர, அந்தப் பட்டத்தைப் பயன்படுத்த விரும்பவில்லை. எனக்கு விருப்பமான வெற்றிமாறன், மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்களுடன் இணைந்து விரைவில் நேரடித் தமிழ் படத்தில் நடிப்பேன் என நம்புகிறேன். நல்ல கதைகள் அமைந்தால் கண்டிப்பாகத் தமிழில் படம் தயாரிப்பேன். சமூக வலைத்தளங்களில் தமிழ் ரசிகர்கள் பதிவிடும் கருத்துகளை இப்போது உள்ள மொழிபெயர்ப்பு (Translation) வசதி மூலம் படித்துப் புரிந்து கொள்கிறேன்.
நான் இங்கு பிறந்து வளராத போதிலும், என்னை ஒரு சொந்த வீட்டுப் பையன் போல ஏற்றுக்கொண்ட தமிழ் மக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். இயக்குநர் மாரி செல்வராஜின் தமிழ் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால், நடிகை கயாடு லோஹர் இந்த பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வர முடியவில்லை. விரைவில் விளம்பர நிகழ்ச்சிகளில் இணையவுள்ளார். கதையை விட, அதைச் சொல்ல வரும் இயக்குநரின் நேர்மையும், சினிமா மீதான அவரது தீவிரக் காதலுமே எனக்கு முதன்மையானது. நேர்மையான மனிதர்கள் ஒரு சாதாரண கதையைக் கூட சிறந்த திரைப்படமாக மாற்றிவிடுவார்கள். அதன்பிறகே கதையையும், என் கதாபாத்திரத்தின் வித்தியாசத்தையும் பார்ப்பேன்.” என்றார்.