தீக்குளித்து காவல் நிலையம் நுழைந்த பெண்: “என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?” – தமிழிசை சௌந்தரராஜன் | Woman enters police station after setting herself on fire: “What is happening in Tamil Nadu?” – Tamilisai

Spread the love

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லட்சாதிபதி. இவருக்கும் உரையூர் ஊராட்சி செயலாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனால், ஊராட்சி செயலாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதன் அடிப்படையில், லட்சாதிபதியை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றிருக்கின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த லட்சாதிபதியின் மனைவி கண்மனி, காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஒருகட்டத்தில் காவல்நிலையத்துக்கு வெளியே சென்றவர், உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு, காவல் நிலையத்துக்குள் நுழைந்திருக்கிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் கண்மணியை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கின்றனர். ஆனால், கண்மணிக்கு தீக்காயம் அதிகமாக இருந்த காரணத்தால் அவரை மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் கண்மணியின் உறவினர்கள், காவல் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *