“‘தீனா’ படத்தை கைவிட்டுவிடலாம் என்று முடிவு செய்திருந்தேன்!” – ஏ.ஆர். முருகதாஸ் |”I had decided to drop the movie ‘Dheena’!” – A.R. Murugadoss

Spread the love

அதேபோல் இன்னொரு சம்பவமும் நடந்தது. என்னுடைய முதல் படமான ‘தீனா’ தொடங்கிய போது, முதல் படம் என்பதால் எனக்குள் சில குழப்பங்களும், படம் சரியாக வருமா என்ற பயமும் இருந்தது.

அந்த பயத்தின் காரணமாக, இரண்டு நாட்கள் ஷூட்டிங் முடிந்த பிறகு, இந்தப் படத்தையே கைவிட்டுவிடலாம் என்று கூட நான் ஒரு கட்டத்தில் முடிவு செய்திருந்தேன்.

மனம் முழுக்கக் குழப்பத்தோடு ஒரு ரிசப்ஷனில் அமர்ந்திருந்த போது, தற்செயலாகச் சசி சாரைப் பார்த்தேன். அவர் எனக்கு வாழ்த்துகள் சொன்னார்.

ஏ.ஆர் முருகதாஸ்

ஏ.ஆர் முருகதாஸ்

நான் அவரைத் தனியாக அழைத்து, “இல்லைங்க, படம் சரியாக வராது போலிருக்கிறது. நிறுத்தலாம் என்று இருக்கிறேன்” என்றேன்.

அவர் பதற்றமாகி, என்னைத் தனியாக கூட்டிச் சென்று, “இங்க பாரு, படத்தை வேண்டாம் என்று சொல்லி பாதியிலேயே வெளியில் வந்துவிட்டால், அதுவே அந்தப் படத்தின் தோல்விக்குச் சமம். போராடு.

நாம் நினைத்தபடி நூறு சதவீதம் வராவிட்டாலும், ஒரு எழுபது சதவீதம் வந்துவிட்டாலே அது ஆடியன்ஸுக்கு நூறு சதவீதத் திருப்தியைக் கொடுத்துவிடும்” என்று நம்பிக்கை தந்தார். நான் மறுநாளே அந்தப் படத்தை மீண்டும் தொடர்ந்து செய்ததற்கு காரணம் என் நண்பன் சசிதான்.”என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *